சர்க்கரை இருக்கிறதா
கொஞ்சம் போடவா
என பாசமாய் கேட்கும்
ஒவ்வொரு தடவைக்கும்
மிகையாகியேயிருக்கிறது...
அதே தோரணையில்
சிறிது கரகரத்த குரலோடு
இன்றும் காப்பி தயாரிக்கிறாள்
ஆனால்
இது மாமாவுக்கு...
அக்கா!!!
-
உங்க கூட நடந்தவங்க உங்களை விட்டு போக ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நீங்க அவங்கள கடந்து போயிடுங்க...
இல்லைனா நீங்க கடக்க வேண்டிய தூரம் நீண்டுகிட்டே இருக்கும்...-
எத்தனை நீண்டதிந்த சாலைகள்...
எத்தனை யாயிரம் வாகனங்களை பார்த்திருக்கும்
இருசக்கரம் நாற்சக்கரமென
புகை துப்பியும்
சற்பமாய் நெளிந்த
எண்ணெய் ஊற்றில் தெரியும்
சில நிமிட வானவில்லையும்
ரசித்திருக்கும்...
சலிக்காமல் நடந்த
பாதங்கள் சுமந்த
கனவுகளையும் சேர்த்து
கொஞ்ச கொஞ்சமாய்
விரிசலுற்றும் இன்னும்
விடாமல் பிடித்திருக்கின்றன...
-
சட்டென விடியல் தரும்
நாள்யாவும்
விஷேஷமானதும் இல்லை
விடிந்திரா
அடர் இரவுகள் யாவும்
அத்தனை
கொடுமையானதும் இல்லை!!
-
Understandable words are not right incomprehensible silences are not wrong
புரிகின்ற சொற்கள் சரியானவையும் அல்ல, புரியாத மௌனங்கள் தவறானவையும் அல்ல
-
Don't need to feel guilty for anyone because no one is real here as much as you feel.
-
நிழலைத் தவிர்த்து
நிஜத்தில் தேட
நீங்காமல் நிறைந்திருக்கும்
நினைவுகளாயினும்...-