அப்பா
என் குரள் எப்படியிருக்கும்
என்பதே மறந்துபோச்சு
நான் சந்தோஷமா பேசி
பல நாளாச்சுப்பா
யாரையும் நம்பாதீங்கனு
சொன்னீங்க
யார நம்பி
என்ன விட்டுட்டு போனீங்க
யாருமில்லாத அனாதையா
என்ன ஆக்கிட்டிங்கப்பா...😞-
நீ எனக்கு வேண்டாம்
நீ எனக்கு வேண்டும்
நீ மட்டும்தான் வேண்டும்
என்று நினைத்த நாட்களையெல்லாம்
கடந்து வெகுதூரம் வந்துவிட்டேன்
உன் முகம் பார்க்கவும்
உன் குரல் கேட்கவும்
உன் கைக்கோர்த்து நடக்கவும்
மனம் ஏங்கி கொண்டிருக்கிறது
திருமணம் என்னும் வார்த்தையை
கேட்கும்போதெல்லாம்
ஒரு நொடி உன் முகம் நினைவுக்கு வந்துபோகிறது
உன்மேல் நான்கொண்ட
என் முதல் காதல்
அந்த வெள்ளந்தியான காதல்
மீண்டும் ஒருமுறை வேறொவரின் மீது
மலரப்போவது இல்லை
அதற்காக நீ திரும்பவும் வேண்டும் என்று இல்லை
என்னோடு இல்லாவிட்டாலும்
யாரோ ஒருவரின் இதயத்தில்
நீ பாதுகாப்பாய் இருந்தாலே போதும்
நீ எனக்கு வேண்டாம்-
கட்டில் கூட நரகம் தான்
விரும்பாத காமத்தில்
கயிறு கூட சொர்க்கம் தான்
விரும்பிய மரணத்தில்-
காதல் கவிதைகள்
எழுத
காதலிக்க வேண்டிய
அவசியம் என்ன?
பட்டாம்பூச்சியின்
அழகை விவரிக்க
பார்வையாளனாக
இருந்தால் போதாதா?-
கடந்து வந்த பாதை
அவ்வளவு எளிதானதல்ல
கடக்க போகும்
பாதையும்
விதிவிலக்கல்ல-
உடலை
தொட நினைக்கும்
காதலை விட
உள்ளத்தை
தொட நினைக்கும்
காதலுக்கு
வாழ் நாள் அதிகம்-
கண்கள் மூடினாலும்
உள்ளம் விழித்திருக்கிறது
தாலாட்டு பாடிட
தாயின் பூக்குரல் வேண்டாம்
தவழ்ந்து விளையாடிட
தந்தை மடி வேண்டாம்
இரண்டுமாய் இருந்திடும்
உன்னுடன் வாழ்ந்திட
ஒரு நொடி போதும்-
Don't be too honest
with someone
because
no one in this world
deserves too much honest...-
ஒரு ஆணால்
தேடப்பட்ட
பெண் தான்...
இன்று
உன் கண்ணால்
மீட்கப்பட்டு
பொன்னானேன்
-