எந்தன் வானில்
வானவில்லாய் நீயடி!
உன்னை தினம் தரிசிக்கவே
தூரலாய் மாரி பொலிகிறேன்...
புன்னகை பூத்து விடு
புதிரிலிருந்து விடுத்துவிடு...— % &-
Twitter at samcb_cb
Whatever it is, life has to move on.
தணிந்த கோபத்தின் உணர்ச்சியை
சிறு உரையாடல் கூறும்
எண்ணிய கூற்றும் கூட திசைமாறும்
ஓர் ஓரத்தில் இதயம் கசிந்திருக்கும்
முழுதாய் நாட்காட்டி மாறுமுன்னே
ஒரு முறை பாரடி பெண்ணே
உன் கண்ணசைவில் சிக்கிய நானும்
நாணாய் தான் திவழ்கிறேன்
மீண்டும் ஒரு முறை பாரடி
சிக்கிய நானும் புன்னகையோடு
புறம் தள்ளி இருப்பேனே...-
புது புது தோல் மாற
சில குணங்களும் முதிர்கிறது
புது புது நேரம் சுழல
சில நினைவுகளும் அழிகிறது
எத்தனை புது புது விசயங்கள் மாறினாலும்
சில இரவுகள் மட்டும் மீளாமல் போகிறது...-
மூக்கும் மூக்கும் உரசா
இதழ் முத்தம் ஒன்று தா
நிமிடங்கள் வரை நீளட்டும்
கைகளையும் இறுக்கிக்கொள்கிறேன்
மூழ்கித்திளைத்த முத்த போர் முடியுமுன்
இமையோடு இமை உரசி கண்கள் பார்க்கட்டும்
உதடுகள் மட்டுமா காதலை சொல்கிறது?
கருவிழியும் காட்டும் நீ தான் என்று...-
அஞ்சியே தினம் தினம் கரைகிறேன்
ஆக்கிரகம் கொள்ளாதே பெண்ணே
இகத்தல் ஏற்பட்ட பின்பும்
ஈகையாய் என்னை மன்னித்துவிடு
உன் அரவணைப்பில் பழகியே விட்டேன்
ஊழிகாற்றாய் எனை அழிக்காதே
எட்டிபிடித்திடும் ஆசை இருந்தும்
ஏதோ தள்ளியே நின்று விட்டேன்
ஐக்கியம் கடினம் தான் என்றாலும்
ஒருமனதாய் மன்னித்துவிடு
ஓராயிரம் முறை உன்னோடு வாழ்கிறேன் கனவினிலே
ஔதிடமாய் ஒரு முறை சந்தித்து விடு
ஃகணமே என்னை நான் மீட்பேன்...-
தனிமையிலேயே இருந்து விடு
சில நேரம் ஜொலிக்கின்ற
பல நேரம் கசக்கின்ற
நஞ்சான உலகதில்
நிரந்தரம் என்று ஏதுமில்லை
உன்னோடு உன் விரல் மட்டுமே
வழியே இல்லாமல்
வலி இருந்தாலும் உடனிருக்கும்-
அத்தனையும் மறந்தேன் என்று சொல்லி
எத்தனாய் தான் நானும் திரிந்தேன்
எண்ணப்பேழை கவிழ்ந்திடுமோ
உன் நினைவுகள் அதில் சேரவே
பித்தும் பிடித்து போனது
உயிர் நாடியும் துடிக்க மறக்கிறது-