நிகழ்வுகள் நினைவுகளை நகல் எடுக்க...நடப்பது நிதர்சனமோ என நம்பிய வேளை அனைத்தும் நிழலாய் விட்டு நகர்கிறதே...
-
நிலவில்லா வானம் போல் , நீயின்றி நான்...
ஒளிக்காய் சிறு நட்சத்திரப் புன்னகைகள் அவ்வப்போது காட்டி...-
அளவில் சிறியதாய்...
வண்ணம் பலதாய்...
என்றேனும் இனிப்பாய்...
எப்போதும் கசப்பாய்...
உன்னை பிடிக்காதெனினும் ,
அம்மாவின் கண்டிப்பில் சில நாள்,
வலியின் விளிம்பில் சில நாள்,
என் மீதே அக்கறையில் ஒரிரு நாள்...
பொருத்துக்கொண்டே விழுங்கி முழுங்கி , வாழ்க்கையை போல் நோயும் சரியாகும் என ஆறுதல் தெரிவித்துக் கொண்டு நகர்கிறேன்...!!
-மாத்திரை💊-
நீ அருகில் இருக்க , இரவு நீள கேட்கிறேன்...
தொலைவிலிருக்க , நொடியில் விடியல் கேட்கிறேன்...
நீ இல்லா தருணம் சமநிலை இழக்கிறேன்...-
ஓர் முறை வந்தாலும்
முழுதுமாய் அடித்துச் செல்கிறாய்...
என் ஸ்பரிசம் நானே உணர,
இதயத் துடிப்பை இரட்டிப்பு ஆக்கி...
கன்னத்தில் இளஞ்சிவப்பு வர்ணம் பூசி...
கால்கள் காற்றில் மிதந்து,
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க,
கைகள் சட்டென்று சில்லென்றாக,
நானே என்னை இழக்க,
உறுப்பு எல்லாம் உன் கட்டளையில் இயங்குகிறதே...
-
உன்னுள் விழுந்த நொடி முதல்
இன்னும் எழவில்லையடா...
நாட்கள் ஆயிரம் ஆயினும் ,
பிறகொரு ஐநூறு ஆயினும் ,
காதல் எனும் நம் பந்தம் நீள
இதயம் தினம் கேட்குதே...-
அவள் ஏன், எதற்கு என கேட்கும்
கேள்விகள் நூறு..
பதிலோ ஒன்று,
"அதெல்லாம் அப்படித்தான்" என்று.-
தினம் உன்னை ரசிக்க,
கொஞ்சம் என்னை இழக்க,
நம் காதல் காட்ட, பேசிச் சிரிக்க,
ஏசி நகைக்க, நினைவுகள் சேகரிக்க..-
Follow my tamil quote page on Instagram if you like
https://www.instagram.com/samrakshaki/-
மெல்லக் கைநீட்டி மேகங்களைக் கலைக்கிறேன்,
உன்னில் தொலைந்த நான் அங்கே கொஞ்சம் இருப்பேனோ என...
-