Salem_ Kalaiyarasan_95   (சேலம் த.கலையரசன்🖋)
1.3k Followers · 3.2k Following

read more
Joined 30 November 2017


read more
Joined 30 November 2017
27 MAY AT 17:16

ஆறுதல் என்பதெல்லாம்,

ஒரு விதமான போதைதான்

அதில் சிக்கிக் கொள்ளாத வரை

மனம் சிரமப்படாது...













-


27 MAY AT 16:54

பொய்கள்

ரசிக்கும்படி இருந்துவிட்டால் ,

உண்மைகளுக்கு

நம்பகத்தன்மை இருக்காதோ!









-


27 MAY AT 16:51

தென்றலைப் போல,

சிறந்த உளவாளி யாருமில்லை..

நீரைப் போல,

சிறந்த ஊடுருவி யாருமில்லை..

சூரியனை போல,

சிறந்த உழைப்பாளி யாருமில்லை..

நிலவைப் போல,

சிறந்த கொடையாளி யாருமில்லை ..









-


27 MAY AT 16:23

மனதிற்கு

விருப்பமான நபர் என்பதில் தொடங்கி,

எனக்கு விருப்பமில்லை என்பதற்கும்

இடைப்பட்ட பயணம்தான்

இந்த காதல் என்பதெல்லாம்......











-


27 MAY AT 16:16


பிரியம் என்பதெல்லாம்,

நீயும் நானும்

பிரியாதிருக்கும் வரைதானோ!










-


27 MAY AT 16:11


நீ என்னை நிராகரித்து விட்டால்,

என் ஆசைகள் அத்தனையும்

அனாதைகளே....








-


27 MAY AT 16:02


என் எதிர்பார்ப்புகளின்,

முழு பிம்பம்

நீ!









-


27 MAY AT 15:52


உன் விருப்பத்திற்கு மாறாக,

நான் செய்யக்கூடிய ஒரே தவறு

தொடர்ந்து

உன்னை காதலிப்பது மட்டும்தான்...







-


18 MAY AT 22:01

சின்னஞ்சிறு ஆசைகள்

உன்னுடையது எல்லாம்...

எனக்குத்தான் அதையெல்லாம்

நிறைவேற்ற தெரியவில்லையோ

என்ற பெரிய வருத்தம்

சூழ்ந்து விடுகின்றது.....



-


18 MAY AT 21:52



காற்று வந்ததும்,

இந்த

காதல் வந்ததும்,

மெல்லிய ஒரு பாடல்

நுழைந்ததும்,

நிஜமாய்

நான் அறியேன்...

கண்ணம்மா!





-


Fetching Salem_ Kalaiyarasan_95 Quotes