Sakthi Priya   (Sai Sakthi)
63 Followers · 98 Following

Joined 24 April 2018


Joined 24 April 2018
7 MAR 2024 AT 22:04

இந்த உலகத்தின் இருண்ட பக்கத்தில் வாழும் சில மனிதர்களின் ஏச்சிகளாலும் பேச்சிகளாலும் உயிரற்று போன அவள் விழிகள் எதையோ வெட்டவெளியில் வெறித்து பார்த்து கொண்டிருக்க...
திடீரென தோன்றிய அவன் பிம்பம் அவள் கண்களுக்கு உயிரூட்டியது 👁️👁️

-


4 JAN 2024 AT 13:38

எப்போதெல்லாம் அவனை தேடுவாய்? என்று தோழி கேட்க....

கண் விழித்ததும் இந்நாளின் முதல் நினைவும் அவன் தான்....
கண்ணாடி பார்த்து கண் மை இடுவதிலும் அவன் தான்...
பேருந்தில் சன்னலோரத்தில் அமர்ந்து ரசிக்கும் பாடலும் அவன் தான்...
நீண்ட நேர வேலைக்கு இடையில் இளைப்பாரும் இடமும் அவன் தான்....
மாலை நேர காதல் காற்றில் என்னை தொட்டு செல்வதும் அவன் தான்...
இரவு நேர பனியில் பால்கணி வழியே உணர்ந்த குளிரும் அவன் தான்...
நடுநிசி நடுக்கத்தில் தொலைவில் இருந்து வரும் இதமான குறுஞ்செய்தியும் அவன் தான்...

இதில் எதை நான் சொல்ல....???!!!!!

-


31 DEC 2023 AT 13:20

என் நிகழ்காலத்தை நிறுத்தி வைக்க அவன் நினைவால் மட்டும் எப்படி முடிகின்றது???

-


30 DEC 2023 AT 22:49

என் காதலை உன்னிடம் உரைக்காமல் இருக்க, உதடுகளை மட்டும் சிறையில் அடைத்த நான்,
கண்களை கைது செய்ய மறந்ததால் அவை எப்போது உன்னை கண்டாலும் தன் கண்ணீரால் அந்த காதலை உரைத்து விட்டு தான் செல்கிறது என்ன செய்ய....!!!

-


21 DEC 2023 AT 14:28

அவனால் மட்டும் எப்படி முடிகிறது அவன் நினைவுகளாலே என்னுள் வண்ணத்துப்பூச்சிகளை
பறக்க வைக்க??? 🥰

-


19 DEC 2023 AT 8:55

"இத்தனை காதலை வைத்து கொண்டும் ஏன் அவனிடத்தில் நெருங்காமல் தொலைவில் இருந்தே பார்த்து கொண்டு இருக்கிறாய் " என்று தோழி கேட்க,
சிறு புன்னகையுடன் அவள் "அவன் தொலைவில் இருப்பதால் எனக்குள் வரும் ஏக்கமே என் காதலை பன்மடங்கு அதிகமாக செய்கிறது. அந்த ஏக்கத்தின் தவிப்பே என் காதலின் உணர்வு " என்றாள் அந்த பைத்தியக்காரி..🥰

-


12 DEC 2023 AT 18:35

சிறகடித்து பறக்க பயந்து கூண்டுக்குள்ளே சிக்குண்டேன் பல நாட்கள்....
பறக்க உன் மனம் தந்து வானமாய் விரிந்தாய் எனக்காக...
உன்னுள் என்னை சுதந்திரமாய் உணர்ந்த அந்த சில நாட்கள் என்றுமே என்னில் நீங்காத வசந்த காலம்....

ஆனால் இன்று சிறகுடைந்து சிதறிய இறகாய் மீண்டும் அடைப்பட்டுவிட்டேன் என் மாயக்குண்டுக்குள்...!!!!

-


9 DEC 2023 AT 22:56

என் அனைத்துமானவனே..

அந்த கடற்கரை ஓரம் நாம் அன்று அமர்த்திருந்த வேளை மனதிற்குள் அத்தனை துடிப்பு...!!!

உன்னை தொட்ட தென்றல் என் கன்னம் வீசி செல்வதிலும்....
ஆழியின் ஆழமென்னவோ என சிந்தித்த உனக்கு உன் அருகில் இருக்கும் ஏன் மனதின் ஆழம் சிந்தைக்கு எட்டவில்லையா?
கடற்கரை மணலில் அலை வந்து நம் பாதம் தழுவி சென்ற போது எதிர்ப்பராமல் நம் கைவிரல்கள் கோர்த்த அந்த ஓர் நொடி...
பாதம் அடியில் கரைந்த மணலாய் என் மனமும் உன்னில் கரைந்ததை அறிவாயோ நீ????

-


12 OCT 2023 AT 15:46

அவன் என்னை பார்த்து செல்லும் அந்த ஓர் நொடி அவனது விழி விளிம்பு கோடி கவிதைகளை என்னுள் வீசி செல்கிறது ❤️🥰

-


11 APR 2023 AT 15:40

அழகிய பல கவிதைகள் அசையாத உருவத்தை கொண்டிருந்த போதும் ஆழமான உணர்வுகளை கொண்டிருக்கும்... அது போல
நடைமுறை வாழக்கையில் மரமாக மனம் ஆனபோதும்
கற்பனையில் சில முறை மலர்கள் பூத்து மணம் கமலத்தான் செய்கின்றன எந்த வரிகள் உணர்த்துவது போல .!!!!

-


Fetching Sakthi Priya Quotes