Sakthi Nateswaran💕   (Sivasakthi💕)
669 Followers · 184 Following

Joined 18 May 2019


Joined 18 May 2019

உன்னில் அடங்கி உனக்குள்
கலந்து உன்னுடன் என்னை
நான் மறந்திருக்கும் போதெல்லாம்,,
எனது இன்பங்கள்
கொண்டிருக்கும் பரிபூரணம்
என்றதன் அர்த்தத்தை ...

-



தெரிந்தோ தெரியாமலோ
கிழிந்த காகிதமாய்
வாழ்க்கை மாறினாலும் கூட,,

அதையும் கையிலெடுத்து
ரசித்து கப்பல் செய்து விடுவது
போல் அதன் போக்கில்
விட்டால் வாழ்தலென்பது
கொஞ்சம் சுலபமாகி போகலாம் ...

-


15 JUL AT 13:10

இடைவெளி எல்லாம் ....

நெருங்கிய பின் அந்த
நெருக்கத்திலே
இறுக்கமாகும் அத்தனை
இடைவெளியும் ...

-


15 JUL AT 13:07

ஒரு முறை நீ சொல்ல நினைத்ததை
நான் சொன்னதும்
நமக்கான காதலில்
நாம் ஒன்றென
கலந்திருக்கிறோம் என்ற
அந்த திருப்தியின்
இன்பம் அன்பினை
இன்னும் ஆழப் படுத்தியது ...

-


15 JUL AT 13:04

All feelings are depend in your arms ...🩷
That only is my favourite warm ...🩷

-


15 JUL AT 10:20

துடைத்த கண்ணாடியாக
அத்தனை பிரகாசமாய்
பிரதிபலிக்கிறது அன்பும்
இன்பமும் உன்னிடத்தில்
மட்டும் ...

துடைக்க விரும்பாத
தூசுகளாயும் ஒட்டிக்
கொள்கிறது சில
நேரத்தில் உன்னில்
மட்டும் கோபங்களும் ...

-


9 JUL AT 10:16

எத்தனை முறை
எத்தனை விதமாய்
எப்படியெல்லாம்
அனுபவம்
கொ(க)ண்டாலும்,,

மற்றொன்றை
மறுவிதமாய்
அனுபவிக்க
வைக்கும் இந்த
காலத்தின்
சக்கரத்தில்
வாழ்தல் என்பது
எத்தனை
அதிசயம் ...

-


8 JUL AT 20:02

நீ கெஞ்ச கெஞ்ச
நான் கொஞ்சும் போது
நம் காதல் ஊடலாகும்,,

நான் கொ(கெ)ஞ்ச கொ(கெ)ஞ்ச
நீ மிஞ்சும் போது
அந்த ஊடலே கூடலாகும் ...

-


8 JUL AT 19:59

அன்பின் ஆசைகளும்
அதனால் கொண்ட
இன்பங்களும் கொஞ்சமாய்
இல்லை ...

-


8 JUL AT 19:54

அழகான நேரமாய்
அமைகிறது அத்தனை
பொழுதும்,,
அருகில் நீ அன்பாய்
இருக்க ...

அதுவாய் வந்து
சேர்கிறது அத்தனை
இன்பமும்,,
உன் விரல் கோர்த்து
நான் இருக்க ...

-


Fetching Sakthi Nateswaran💕 Quotes