நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்து விடு
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு நிஜங்களை துறந்து விடு
கண்களை விற்றுத்தான் ஓவியமா வெந்நீரில் மீன்கள் தூங்குமா கண்ணீரில் காதல் வாழுமா
அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றினை கை விடுமே
விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்து பின்னே
முத்துக்கள் கை வருமே
காதல் ராஜா
ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே உன்னை கொஞ்சம்
விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனம் எல்லாம் நிரந்தரமல்ல மேற்கில் விதைத்தால்
கிழக்கினில் முளைக்கும்-
தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்
பிடிக்காத வண்ணம் பின்தொடர வே... read more
எண்ணங்களின்
உளியால்
செதுக்கப்பட்ட சிலை
அதை
வடிவமைக்கும் பொறுப்பு
நம் கையில்-
மனமே
ஏற்றுக்கொள்
எது வந்த போதும்
எதுவும் சில காலம்
என்ற எண்ணம்
உனக்குள் உருவாக
மௌனம் பழகு
விதைத்த விதையன்றோ
விருட்சமாகும்
வீனாய் மனம் நொந்து
போவதேனோ
மனதில் தெளிவொன்று
பிறந்த வேளை
மாயவலை கண்டு
என்ன கவலை
-
அருகிலே வந்து தழுவிடு
அனுதினம் எந்தன் இடைகளில்
உன் இதழ்களால் கவிதை எழுதிடு
மென்மையின் தன்மை உன் இதழ்
அதனில் பெண்மையும்
மெல்ல கரைந்திட
-
ஓர்
வெள்ளை காகிதம்
அதிலே என்னுயிர்
உன்னை எழுதியது
விண்மீன்களின்
அழகினைப்
போல என்
எழுத்தும் மாறியது
காரணம்
நான் அறிகிறேன்
உன் அழகினால்
வந்த அதிசயம்
ஆயிரம்
என் வார்த்தைகள்
அவை யாவுமே
உன் ரகசியம்
-
அத்தனையும்
அர்த்தமற்றே போகிறது
உன் பார்வை படாத எழுத்துக்களும்
பயனின்றி வாழ்கிறது
என் காகிதத் தாள்களில்
-
முடிவு சிறந்ததாகவே இருக்கும்
எளிதாக அழைத்துச் செல்லும் பாதைகள் பெரும்பாலும் சிக்கலானவைகளே
-
ஆசை தென்றலே
என்னை ஆள ஓடி வா
அழகு நடையிலே
புது ராகம் பாடவா
எப்பொழுதும் எந்தன் நெஞ்சம்
உன் நினைவில் துடிக்குது
ஏற்றாத தீபமொன்று
இதயத்திலே ஜொலிக்குது
ஆத்தோடு போற வெள்ளம்
ஆள மெல்ல இழுக்குது
ஆனாலும் உன் நெனப்பு
அதுக்கு மேல படுத்துது-
எல்லைகள் அறிந்து
தொல்லைகள் தவிர்த்தேன்
தூரங்கள் கடந்து
காதலை வளர்த்தேன்
காலங்கள் மறந்து
கனவினில் மிதந்தேன்
கானலை ரசித்து
கவிதையும் வரைந்தேன்
என்னுயிரானவனே...!-