Sachu Kannah   (The Poeter)
147 Followers · 135 Following

In தமிழ் as பாரதிபையன்.
In English as The Poeter
Joined 27 April 2017


In தமிழ் as பாரதிபையன்.
In English as The Poeter
Joined 27 April 2017
29 JUN AT 22:42

When you said 'Yes',
I didn't have an idea on
what lies ahead.

After all these years,
now, I see that,
you are my destination

-


23 JUN AT 15:50

என் அன்புள்ள
வாங்கத் துடித்த புத்தகமே!

என்னைக் கொஞ்சம் சகியேன்,
இத்தனை வருடங்களாயினும்
உன்னை முழுதாய் வாசிக்காததற்கு.

முக்கியமாய், 
உன்னை வாங்கிய புதிதில்
கண்டு கொள்ளாமல், உன் மனமுடைத்து
அலமாரியில் அடைத்ததற்கு. 

ஆயினும், நான் உன்னை
திறந்த போதெல்லாம்...
மனம் வெந்து, அண்டிய போதெல்லாம்...
என் மனம் ஆற்றினாய், தொடர்ந்து
புதிய பக்கங்களால் என்னை மாற்றி தேற்றினாய்.

நீ வெறும் புத்தகமா ? யார் சொன்னது ?
எனக்கான புத்த அகம்.

முதல் முறையாக
நீ நினைவில் கொள்ள, இதோ, 
இந்த வரிகளை அடிக்கோடிடுகிறேன்.
கவனிப்பாயா?

"வேறாறுமின்றி,
நீயும் நானும் நாமுமாய் மட்டுமே,
மிச்ச வயதை வாழ்வோமா?"

-


7 MAY AT 19:41

Dear India,

Have you all
gone mad
?

-


8 JUL 2024 AT 23:29

அனுபவங்களை விட
அதற்கான காத்திருப்புகளுக்கே
எடையும் ஆழமும் அதிகம். 
எப்படியெனில், அது அப்படித்தான்!

ஆதலால், வருடந்தோறும் 
நினைவில் வைத்து
கொண்டாடப் போகும்
திருமண நாளை விட,

திருமணத்திற்கு 
முந்தைய, அந்த ஒற்றை 
முந்தைய நாளே

முற்றிலும் உன்னதமானது 
என்பதை உணருங்கள். 
அதன் பரபரப்பில் ஓடி அயராமல் 
அதை மெல்ல நகர விட்டு, சற்று
எட்டி நின்று உங்களை ரசியுங்கள். 

சுற்றி சுழலும் 
சொந்தங்களிடம் இருந்து
ஐந்து நிமிடங்களேனும் தப்பித்து, 
பூட்டிய அறையில், 
தனியாக கண்ணாடி முன் நின்று, 
உங்களை ஒருமுறை 
ஆறத்தழுவிக் கொள்ளுங்கள். 

ஏனெனில், இத்தனை ஆண்டுகளாய்
நீங்கள் வளர்ந்து பகுத்தறிந்து தயாரானது
இனி வரப்போகும் 
அத்தனைக்குமானதுதான்,
அது பெருமகிழ்ச்சியோ பேரின்பமோ!

💌

-


13 MAY 2024 AT 23:33

காலத்தை கொஞ்சம் 
பின்னோக்கி ஊடறுத்து

மனைவியை
மீண்டும்
காதலியாக்கி

அவள் ஊரின் அன்றைய 
ஆர்த்தோடாக்ஸ் தெருக்களின் வழி
அவளின் கையை இறுகப்பற்றி

அவளுக்கான என்
பிரத்யேக கவிதையை
பிரசுரமாக்கி வாசலெங்கும் வீசி

மக்கள் கூடும் ஒரு முச்சந்தியில், 
நாங்கள் எழுதிக்கொண்ட 
கடிதங்களை அடுக்கி மேடையாக்கி

"கடவுளும் காசும் 
ஒரு நாள் திகட்டும்
காதல் நின்று நீண்டு வாழும்"
என்றெழுதிய வாசகம் மிளிர

தவறவிட்ட அத்தனை கண்களும் 
தெளிவாய்ப் பார்க்க
விரல்களுக்கு மோதிரமிட்டு

மீண்டுமொரு முறை 
நாங்கள் முதல் முத்தம் பகிர வேண்டும்.

-


24 FEB 2024 AT 22:55

ஒரு மந்தமான கோடையின்
தொடக்கத்தில்

வீட்டின் ஏதோவொரு
மூலையில் சிதறிய
ஒரு படிக ஜீனி மணி,

உணவு தேடி அலையும்
எறும்பின் முதுகில்
வலிக்காமல் மோதி உட்காரும்
ஆசிர்வாதத்திற்கு
ஒப்பானது ...

துளியும் எதிர்பாராமல்
அவளிடமிருந்து
கன்னத்தில் விழும்
முத்தங்களும்

அவை தாங்கி அருளும்
ஒரு கிலோ ஜூல்
இனிப்புச்சத்தும்
❣️

-


11 FEB 2024 AT 1:14

Sometimes
all we need is
a forgiveness
from our
ownselfs

-


4 DEC 2023 AT 23:49

கடவுள் பொய்
கடவுள்கள் சுத்தப் பொய் !

ஐ டீப்லி நோ தேட்
God இஸ் ஆல் அபவுட் 
மேனேஜிங் மாஸஸ் !! 

ஆனாலுங்கூட ...

விராட் கோலி
எப்போவாவது வீசும்
பேபி ஓவர் போல், 

எங்கள் தெரு ஜெனிஃபர்
நண்பிகளோடு 
கூட்டமாய் வந்து,
ஜெயசக்தி மாரியம்மனுக்கு,

ரகசியமாய் 
ஏற்றிச்செல்லும் 
அகல் விளக்கின்
மெலிந்த சுடர்

காற்றில் ஆடி 
ஒடிய முற்படும் போது
மனம் சற்று
பதைபதைக்கவே செய்கிறது

-


22 NOV 2023 AT 12:13

Understanding her
is easy !

Accepting her
perspectives
under the
spectrum of your own
understandings
is what matters,
much needed

and not that easy

-


25 JUL 2023 AT 9:10

அழகும் அசர
அவளுக்கோர் உவமை
தினம் எழுதிட வேண்டும்

அப்பா தவறவிட்ட
'நல்ல அப்பா' தருணங்களை
மறக்காமல் மகனுக்கு
தந்திட வேண்டும்

நெஞ்சுக்கினிய பாடல்களை
கைபேசி தாண்டி, கைப்பட எழுதியும்
சேமிக்க வேண்டும்

வாழும் நாட்கள் எல்லாம்
வாழ முடிந்த நாட்கள் என
நம்பிக்கை கொள்ள வேண்டும்

முப்பதுகள் முடியும் வரை
வேலைகள் வரையறுத்து
கடிகாரங்கள் மறந்திட வேண்டும்

அறிவுக்கொரு கனவூட்டி
அக்கனவுக்கோர் உயிரூட்டி
வானத்தை ஒருமுறையேனும்
முட்டிப்பார்த்திட வேண்டும்

-


Fetching Sachu Kannah Quotes