உள்ளுவதெல்லம்
உன்னிடம் மட்டும்
உரைக்கிரேன் - நீயோ
உறைக்காமல்
நகர்ந்து செல்கிறாய்
உலர்ந்த மேகமே-
செல்லமான என் தந்தைக்கு லக்ஷ்மி 🤱🤱🤱பெற்று தந்த முத்தான முதல் புதல்வ... read more
வார்த்தைகளை தொடுக்கவே
நேர்த்தியாக நினைவில் நிறுத்தி
பூர்த்தியாகா ஆசைகளை கொஞ்சம்
கோர்த்து உன்னிடம் சமர்பிக்கிறேன்
பார்த்துவிட்டு பதில் சொல்லடி நீயும்
வேர்த்தே காத்திருக்கிறேன் நானும்-
பார்வையின் வாசகங்களை
கோர்வையாய் வரைந்துவிட்டேன்
தேர்வும் நீண்டுகொண்டே செல்ல
தார்மீகம் கருதி இருவருமே
போரை கொஞ்சம் ஒத்திவைத்து
ஊர்கோலம் செல்வோமா-
நீரின் தடமோ
நீலக்கடல் தேடி ஓட
நின் நினைவின் ஓடமோ
நீந்தி கரை சேர துடிக்க
நிற்கதியாய் நிற்கின்றேன்
நீந்தி கடக்கவும் முடியாமல்
நீலகடல் சேரவும் முடியாமல்-
தீண்டல்கள்
தீரப்போவதுமில்லை
தீண்டாமை என்று
தீர்க்கம் கொள்ளவுமில்லை
தர்க்கம் செய்யா உன்னுடனே
தழுவலில் கழிகிறது
தவமில்லா என் நிமிடம்-
உருகித் தொலைத்த
பனிக்கட்டியும் நீராய்
பருகிக்கொள்ளலாம்
மறுகி தொலைத்த
இந்நிமிடம் என்றும்
தருவிக்க முடியுமோ-
புதிதாய் ஒன்றும் எழுதபோவதில்லை
புனைந்த அத்தனை வரிகளிலும்
கருவாய் உனை வைக்க மறந்ததில்லை
உருவை கொஞ்சம் காட்டிவிடு அன்பே
திருவாய் மலர காத்திருக்கிறேன் நானும்
இரவை கொஞ்சம் துரத்திடுவோம் நாமும்
உறவை கொஞ்சம் வளர்திடுவோம்-