நேற்று நேச தமிழினியாய் பிறந்து
இன்று பாச தமிழினியாய் வளர்ந்து
நாளை தேசம் போற்றும் தமிழினியாய் வாழ்ந்து
வாழ்கையில் வெற்றியடைய வாழ்த்துகிறோம்
தமிழினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாாழ்க வளமுடன்-
ஆயாமீது தாத்தாவின் காதல்
ஆத்தோர படுகையில
ஆலங்கண்ணா நீ பொறந்த
ஆலமரம் அழகைகண்டு
அப்படியே தூக்ககிவந்தன்
ஆலமரம் விழுதுவிட்டு
ஆலம் தோப்பஆக்கிவச்சன்
ஆலம் விழுதெல்லம் .தரயில
ஆணிவேர ஊனிடுச்சி
என் காலம் முடிஞ்தால
என்னை காலன் அலச்சிகிட்டான்
உன் காலம் முடியும் வரை
என் தோப்ப காத்திடனும்
ஆலமர தோப்புல
ஆதிமரம் பட்டுப்போச்சி
அன்னம் தண்ணியில்லாம
அடியோட சாஞ்சிடுச்சி
நாசிகாத்தும் நின்னுடுச்சி
நாடி துடிப்பும் நின்னுடுச்சி
துளசி தண்ணி ஊத்த.மொத்த
விழுதெல்லம் வந்துடுச்சி
மேல்மூச்சி வாங்கிகிட்டு
மேலோகம் பாத்துவந்த
ஆணிவேரு மட்டும்
ஆழமாக பதிஞ்சிருக்கு
அண்ணன் கை தண்ணி வாங்கி
ஆணிவேர குளிர வச்சோம்
காட்டுக்கு கூட்டி போக ஓடோடி நானும் வரேன்
காதலோடு நீயும் இரு.
-
மகள். பாகம் 4 (மரம் நீ)
என் விதையில் முளைத்த மரம் நீ
எனக்காக நிழல் தரும் மரம் நீ
என்னை காக்கும் மரம் நீ - இறுதியில்
என்னை தூக்கும் மரமும் நீ யே
-
மகள் பாகம் .3
உன் மெய் பேனாவில்
என் உயிர் மை ஊற்றி
நமக்காக வரையப்பட்ட
நம் உயிர் ஒவியம் தான் மகள்
-
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் (சுரேஷ்.சு)
எனக்கு பின் பிறந்தவனே
என்பாசத்தை பகிர்ந்தவனே
அண்ணா என்று அழைத்தவனே
அன்பை அள்ளிதந்தவனே
எங்கள் மரத்தின் கடைசிகனியே
சிவனுக்கு உயிர் தந்தவனே
ஜீவினிக்கு ஜீவன் தந்தவனே
என்னுடைய சக உதிரனே
என்சகோதரனுக்கு
உன் சகோதரனின்
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்
-
ஒளிபிரிவால் வானத்தில்வானவில்
துளிஇணைவால் வாழ்வில் வானவில்
வானவில்லு வண்ணம் போல
ஏழு புள்ள நானும்பெத்தன்
மங்கி போன நிறம் போல
ஆசைக்கு அஞ்சி பெத்தன்
மங்காதா நிறம் போல
அஸ்திக்கு ரெண்டு பெத்தன்
மங்கிபோன நிறமெல்லம்
மகிழ்ச்சியா இருக்கயில
ஏழாவது நிறமொன்னு - உடல்
ஊனதுல விழுந்துடுச்சி
ஆசைக்கு பெத்த அஞ்சில்
பூசை செய்ய வச்சது ஒன்னு
நாலயும் நாலுதிசையில்
நல்லபடியா மணம் முடித்தோம்
மழைநின்ன பின்னாலே
மறைந்துபோகும் வானவில்லாய்
மணம் முடிந்த பின்னாலே- என்னை
மறந்தே போனதையா
மறுபடியும் மழைவந்தல் -வானம்
வானவில்லை வாழவைக்கும்
மறுபடியும் தேடிவந்தால் - தாய்
மகிழ்ச்சியாய் வாழவைக்கும்
காலமும் கடந்துடுச்சி -பெத்த
கணக்கெல்லாம் முடிஞ்சிடுச்சி
கை,காலும் முடங்கிடுச்சி- என்ன
கண்டுகொள்ள யாருமில்ல
ஆறவத பிறந்த ஒன்னு - என்
ஆஷ்த்திய பாத்துக்கிச்சி
உடல்குறையாய் பொறந்த ஒன்னு
உடல், உயிராய் பாத்துகிச்சி
-
விட்டு கொடுப்பதில்லை தேங்காய், சட்னி செய்ய - அதனால்
கெட்டுபோகிறது எளிதில்
விட்டு கொடுக்கிறது தக்காளி, சட்னி செய்ய - அதனால்
கெடாமல் இருக்குறது எளிதில்
கெட்டு போவார்கள் விட்டு கொடுப்பதில்லை
விட்டுகுடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை - என்பதை
தேங்கவும் ,தக்காளியும் தினம் தினம் உணர்த்துகிறது. எனவே
தினம் தினம் தக்காளி சட்டனி சாப்பிட்டு,
தேங்கா குணத்தை தவிர்த்து
தக்களியாய் வாழ்வோம்
-
மகள் - பாகம் 2
எனது நிழலாய் பிறந்தவளே
எனது வாழ்வின் அர்தம்தந்தவளே
எனது கனவை நனவாக்கியவளே
எனது வாழ்நாள் இறுதியில்
உனது நிஜத்தை காப்பவளே-