வரம் கொடுத்தவளுக்கு நான் வரமாய் பிறந்தேன்
எனக்கு வரமாய் வந்தவள் வரம் கொடுப்பவளையே வரமாய் கொடுத்தவள்
So
வரம் + வரம் + வரம் = நான்
அம்மா + மனைவி + மகள் = அப்பா-
சொந்தமாக நீ இருந்தால் போதும் எனக்கு...
பல கவி... read more
தந்தையை மிஞ்சும் அளவிற்கு மகன் பாசம் இல்லை
மகன் தந்தையாகும்போது தந்தையும் இன்றும் அளவிற்கு பாசம் வந்து விடும்-
வரும் காலம் புத்தாண்டாக வசந்தமாய் வானவில்லாய் வாழ்க்கையில் வண்ணமயமாய் நினைத்ததை நிறைவேறும் நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்திடு வெற்றி பெற்றிடு புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்
-
ஆண்டு ஆண்டு காலமாய் அடி எடுத்து வைக்கும் நாம் நினைத்ததை எல்லாம் நடக்காம போயிருந்தாலும் ஆண்டுகள் நம்மை நம்பிக்கையோடு அழைத்துச் செல்லும் புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
எளிதாக கிடைத்து விட்டால் வெற்றியை கொண்டாட முடியாது பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றால் தான் வெற்றியை சந்தோஷமாக கொண்டாட முடியும் முயற்சி செய் தடைகள் தாண்டி வெற்றி பெற்றிடு வரும் ஆண்டு வெற்றியாக உனக்கு மாறும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
இரு உயிர் ஓர் உயிர் ஆனது காதலில் இரு உயிர் ஓர் உயிரானது காதலின் அன்பால்...
-
தனிமை ரொம்ப அழகானது அதை உணர்வாலும் வாழ்வின் ஒரு அங்கமாகவும் கொண்டவர்களுக்கு தான் தெரியும் தனிமை ஒருவரின் சிரிப்பும் அழுகையும் எல்லாத்தையும் இணைத்திருக்கும் தனிமை என்ற சொல் தன்னம்பிக்கை குறிக்கும் ஆனால் அதனுடன் வாழ்வருக்கு தான் தெரியும் அதன் அருமையான நிமிடங்கள்தனிமை ஒருவரை சந்தோஷப்படுத்தும் கஷ்டப்படவும் வைக்கும் ஆனால் நிரந்தரமான நிம்மதி தனிமையில் மட்டுமே கிடைக்கும் தனிமை என்றுமே தன்னலமாக இருக்க விடாது நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் தனிமை ஒரு மனிதனை தன்னம்பிக்கையுடன் வழிநடத்த செய்யும் கேடயமாகும் தனிமை என்றுமே அழகானது தனிமையுடன் வாழ்வோம் தன்னம்பிக்கையுடன் வளர்வோம்
-
உணர்வுகளால் உதித்தவள்
மணமாய் கவர்ந்தவள்
காற்றில் மிதந்தவள்
மேகக் கூட்டத்தில் கலந்தவள்
மழைத்துளியாய் வந்தவள்
பணியால் என்னை அணைத்தவள்
என் முணுமுணுப்புகள் பொருத்துக் கொண்டவள்
என் அன்னை மடி கொண்டவள்
என்னைத் தாங்கிக் கொண்டவள்
எனக்காக துடித்து கொண்டவள்
எனக்காக எதையும் கொடுப்பவள்
என்னவள் என் அன்புக்கு உரியவள்
நீ மட்டுமே என் ஆயுள் ரேகை கொண்டவள்
எல்லாமே நிறைந்த என் துணையானவள்
Happy Birthday My Heart Beat (Kd)-
அப்பா.....................
ஆண்டுகள் பல கடந்தாலும் ...
நீங்கள் செல்லும் எல்லா இடங்களும் உங்களை மட்டுமேநினைவுபடுத்துகின்றன.
கால் போன போக்கில் சென்றாலும் மனம் போன போக்கில் போனாலும் வாழ்க்கை ஒன்றை மட்டுமே நினைவுக்கு கொண்டு வருகின்றன...அப்பா ...அப்பா...அப்பா மட்டுமே ...
சிறுவயதில் என்னவென்று அறியாத நிலையில் நீங்கள் எங்களுக்கு செய்ததும் நினைவு தெரிந்த பின்பு நீங்கள் எங்களுடன் பழகியதும் அப்பா என்ற நிலையிலிருந்து அது அன்பான தோழனின் நட்பாக தொடர்ந்தது என் வாழ்க்கையில்...
பள்ளி பருவத்தில் உங்களின் கண்டிப்பும் கல்லூரிப் பருவத்தில் உங்களின் கவனிப்பும் என் வாழ்கையில் நல்ல அறிவு பூர்வமாய் நடக்கவும் உங்கள் வளர்ப்பின் அனுபவத்திலும் என் வாழ்க்கைக்கு
இப்படி தான் என்று ஒவ்வொரு பருவத்திலும் சொல்லி சொல்லி வளர்த்த உங்கள் அன்பு நட்பு நீடிக்க வேண்டும் என்று தான் என் மனதில் ஆசை கோட்டை கட்டினேன். ஆனால்..,
இப்போது அனைத்தும் நினைவுகளாவே என்னை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது உங்கள் நினைவுகள் மட்டும் தான் அப்பா...
அன்புள்ள அப்பாவுக்கு மகன் நான் ....-