பொங்கும் பாலில்
தெளித்த நீராய்
பொங்கல் முடிந்தவுடன்
போராட்டம் முடிந்துவிடும்
என நினைத்தீரோ ?
போராட்டக்களம்
போர்க்களமாகும் முன்
பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!-
எனக்கு...
எலுமிச்சை நிறமில்லை
என்றாலும் கவலையில்லை
பளிங்கு முகமில்லை
ஆனாலும் பரவாயில்லை
வாழைத் தொடையுமில்லை
மடியும் மெல்லிடையுமில்லை
செழித்த மார்புமில்லை
சுண்டியிழுக்கும் இதழுமில்லை
இருந்தாலும்
என்னைப்போல் அழகி - இங்கு
யாருமில்லை!-
அதிசயமாகி
ஆடம்பரமாகி
அத்தியாவசியமாகி
அடிமையாக்கி
அர்த்தமற்றதாகி
அற்றுப்போய்விட்டது
தொலைக்காட்சிப்பெட்டி-
கத்திக் கத்திக் களைத்திருந்த தவளையொன்று - நான்
கண்விழித்ததும் எதிரே நின்றது
வெகுநாள் காணாத கானமேதையைக்
கண்டு மகிழ்வேனோ? - இல்லையென்
கழிவறையில் காத்திருக்கும் அதைக்
கண்டு மிரள்வேனோ?-
மகளுக்கு ஊட்டிவிடும்
ஆசையை அணைத்தது
துப்புரவு தொழிலாளரின்
உள்ளங்கை வாசம்.-
அவனில்லா இரவுகளில்
தலையணையே - நீ
தலைவனாய் மாறி
என் தாபம் தீர்க்க
வருவாயா?
-
Everyone knew her as an intelligent girl
Little did they know that
She fell for his fake flirts..!-
தந்தையாய் தோழனாய்
அண்ணணாய் தம்பியாய்
காதலனாய் கணவனாய்
கண்ணியத்துடன்
பெண்ணியம் போற்றும்
அனைவருக்கும்
ஆடவர் தின நல்வாழ்த்துகள்!
-
He was always her comma..
Never finished and never let her go!-