பேனாவிற்கு வேண்டுமானால்
உயிர் இல்லாமல் இருக்கலாம்...
ஆனால் எழுதிய எழுத்திற்கு
உயிர்ப்பு இருப்பதனால் தானே
என்றோ எழுதிய வரிகள்
இன்று கண்ணீரை/ புன்னகையை
வரவழைக்கின்றது!!-
Enjoy every li... read more
அவனதிகாரம்:
அனுப்பிய அரை நொடிக்குள்
அவன் பார்க்க வேண்டாம்...
அரை மணி நேரத்திலாவது
பார்த்து விட மாட்டான
எனது குறுஞ்செய்தியை....
ஏங்கி தவிர்கின்றேன்
எப்பொழுது எனக்காக
யோசிப்பானென....
- கிராமத்து_தமிழச்சி-
முயல்கிறேன்
ஆனால்
மீண்டும் மீண்டும் உன்
நினைவுகளுக்குள்ளே
புதைந்து போகிறேனே!!
ஏன்?
இரவு விரைவாக கடந்து
விடாதா?
இந்த தனிமை எனை துரத்துவதை
நிறுத்தாதா?-
If you are honest
Doesn't mean everyone will.
Say them that is wrong
But never force them to change-
சத்தத்தில் மட்டுமா சங்கீதம் படைத்தாய்?
மூச்சுக்காற்றில் இயற்றியுள்ளாய்
என் மூச்சை இயக்கியுள்ளாய்!!
ஓராயிரம் பாடல்கள் எனில் அன்றோ
மறந்திருப்பேன்
நான்கு தலைமுறை இசையல்லாவா நாற்பது தலைமுறையையும் இயக்கி செல்வாய்!!
உயிர் வேண்டுமானால் பிரிந்து
செல்லலாம் உம்மூச்சு இசையில் மட்டுமல்ல
என் இதயதுடிப்புடன் துடித்துக்கொண்டே இருக்கும்!!
உனது குரலின் ஆழம் உணர்ச்சிக்களுக்கே உரித்தானது!!
பயணத்தின் சுவாரஸ்ய நண்பன் நீ,
மனக்கவலைக்கு ஆகச்சிறந்த மருந்தும் நீ,
மகிழ்ச்சியின் காலூண்டா நடனமும் நீ!!
உன் இடத்தை பூர்த்திசெய்ய
நீயே உள்ளாய்!!
இசையுடன் என்றும் இருப்பாய்
என அறிந்தும் வருந்துகிறேன்!
- கிராமத்து_தமிழச்சி-
என்னருகில் நீ இல்லை தான்
இருந்தும்
மனதோடு உன் நினைவுகள்
மன நிறைவான காதல்
சாரலின் குளிருக்கு
இதமாக!!
கனவில் கண்டேன் உனை
விடிந்தும் காணவில்லை
கதிரவனை
மழையின் காதலில்
மூழ்கியதோ?-
உன் நினைவுகள்
போகும் வழி எங்கும்
உன் தடங்கள்
சுவாசிக்கும் மூச்சு எங்கும்
உன் வாசனை
பூக்கும் புன்னகை எங்கும்
உன் காதல்
சிந்தும் கண்ணீர் எங்கும்
உன் பிரிவு
நித்தமும் சரி நித்திரையிலும் சரி
நீ மட்டுமே-