இருளால் களையும் நிழல்போல, சில நிகழ்வால் தளரும் மனம் அதனை, மயிலிரகால் வருடும் ஒளி சூழ, முழு மதியாய் மலர்ந்த மாதவனே...!
-
Ramya SG
(RAMYA SG)
82 Followers · 2 Following
Joined 12 February 2019
11 DEC 2024 AT 21:58
13 OCT 2024 AT 0:57
ஒருவர் இருக்கையில்
அறிந்திடாத பலவும்
அவரை இழந்ததும்
அறிவதுவே...!
இம்மானுட இயல்போ...?-
12 SEP 2024 AT 21:41
அலைந்து திரிந்து
மறைந்து நுழைந்து
தீண்டலுடன் நகர்ந்த
காற்று அறியாது
அவள் என்றுமே
கதிரவனின் காதலி என்று...!
-
12 MAY 2024 AT 22:38
வெயிலில் பூத்த மழையாய்
சட்டென்று மறைவதைப்போல்
என் தீராத ஆசைகளில்
தீ மூட்டியதும் அனைப்பதற்கு...?-
18 APR 2024 AT 21:25
நினைவில் நீ வந்தாய்
நிலவென்று நினைத்தேன்
ஒளியாய் இதமளித்தாய்
கனவென்று நினைத்தேன்
கண்ணேதிரே தோன்றினாய்
உறவென்று நினைத்தேன்
உறுதுணையாய் நின்றாய்
காதலென்று நினைத்தேன்
காணாமல் போனாய்...!-
26 JUN 2023 AT 21:35
நீங்காத நிழலும் நீ
மறக்க மறக்க
மறையாத மகிழ்வும் நீ
கலைக்க கலைக்க
கலையாத கனவும் நீ
விரும்ப விரும்ப
விரும்பாத விலகல் நீ
விடிந்தும் விடியாத
காரிருள் போல்
கிடைத்தும் கிடைக்காத
கற்பனையும் நீ...!
-