நீ வார்த்தைகள் என்றானதும்
நான் கவிதை என்று வடிவெடுத்தேன்
நீ விழிகள் என்றானதும்
நான் விண்மீனென்று உருவங்கொண்டேன்
நீ மங்கை என்றானதும்
நான் மலர்களென்று முகிழ்ந்து விட்டேன்
நீ நாணம் என்றானதும்
நான் நங்கையாகி நனிமகிழ்ந்தேன்
நீ நானென்று உணர்ந்த கணம்
நான் காதலில் கனன்று விட்டேன்.
- Rama Sundari
12 JUN 2017 AT 20:19