எந்தன் உருவம் அவள் கண்ணில் தெரியும் முன்னே காதல் கொண்ட தேவதை அவள்...
அவளின் வலிகள் கொண்டு எந்தன் வருகை காண காத்திருந்த பூமகள் அவள்..
என் குரல் கேட்காமல் அவள் விழி உறங்கியதில்லை.
என் முகம் பாராமல் நிச்சயம் அவள் உறக்கம் முழுமையில்லை.
அவள் விதைத்த பாசம் அன்றி நான் விளைந்திருக்க வாய்ப்பில்லை,
அவள் கொடுத்த காதல் போலே இன்றும் ஓர் காதல் என்னை வந்து சேரவில்லை,
அவள் காதலை கையில் வைத்து நான் கொள்ளும் காதல் எல்லாம்
சில காலம் தாண்டி இல்லை.
அவள் கொண்ட காதல் போலே
இவ்வுலகில் நிலையென ஏதுமில்லை.
எந்தன் தாய் அவள்
அவளின் காதலில் தொடரும் நான்.....
-
instagram👇
மாளிகையில் இருந்து கொண்டான்,
மாதம் ஒருமுறை விரதம் இருந்தான்.
ஒரு வேளை பட்டினி கிடந்து
பாதி உலகம் எனக்கு வரமாய் வேண்டும் என்றான் வேண்டியது உள்ள படி அவனுக்கு
வரங்களாய் கொட்டி தந்தை என் இறைவன்..
அவன் கோபுர வாசலில் தான் நானும் இருந்தேன்
அவனை எண்ணி நொடியும் பசியில் நோன்பு இருந்தேன்
இறைவா! இறைவா என்று உச்சரித்தே பட்டினி கிடந்தேன்,பசியால் துடித்தேன்
அவன் கோபுர தங்கம் வேண்டுமென்ற அவனிடம் வரங்கள் கேட்டேன்,
அங்கங்கள் குருடான என்னுடலில்
அடிவயிறு மட்டும் குருடாக வில்லையே
ஆசைகள் துறந்த என் தேகம்
பசியை மட்டும் மறக்க வில்லையே
அதன் பசியை தீர்க்க தானே இறைவன்
அவனிடம் வரங்கள் கேட்டேன்..
மாளிகையில் அமர்ந்தாருக்கு வரம் அளித்த என் இறைவன்,
அவன் மளிகையின் வாசலின் இருக்கும் என்னை மறந்தானே
வரங்கள் அளிக்க மறுத்தானே...
ஒருவேளை சோறு இல்லையே
வயிறின் ஒரு ஓரம் கூட நிறையவில்லையே
ஒற்றை ரூபாய் எந்தன் தட்டில் விழாதா
உன்னில் வரங்கள் கேட்கிறேன்
கோயில் உள்ளிருக்கும் இறைவன்
என்னை கைவிட்டான்
மானுடா உன் உள்ளிருக்கும்
மனம் எனும் இறைவன்
எனக்கு வரம் தருவானா
என் பசியை தீர்பானா...
-
ஓவியம் தீட்டும் தேவதையே,
மழலை கொஞ்சும் குழந்தையே,
பாசம் கொட்டும் பாவையே...
உண்ண மறந்தவளே, உறக்கம் தொலைத்தவளே,
தொல்லை தராமல் தொலைவில் இருந்தே என்னை என்னில் தொலைத்தவளே..
வண்ணம் தீட்டுக்கிறாய், நித்தம் வானவில் போல என்னில் பேச வந்து மறைந்தவளே...
விழியில் மறைந்தவளே என் வழியில் வருவாயா
துணையாக தோழியாக....-
அவள் வலிகளை மனம் உணர்ந்திடும்,
மறு நொடியினில் நிதம் பதறிடும்,
தோழி உன்னால்
நொடியினில் வந்த நினைவுகள்
நெடுநாள் வரும் தொடர்கதை,
படித்தால் இன்று முடிந்து போகுமா?
உன் சுமையா அதை பார்க்கலாம்
என்னில் சுகமாய் அதை ஏற்கலாம்,
உன் சோகம் என்னில் ஏற்றல்
அன்பில் உறவில் முறையே.....-
விதையிட்டான் துளிர்த்துவிட்டேன்,
வேரில் நீர் விட்டான் வளர்ந்து விட்டேன்,
இருந்தும் உன்னை பிரிந்து
மண்ணில் செழிக்க
என்னில் வழி இல்லை
விண்ணை பிளந்து மண்ணில் வருவாயா
என்னை நனைக்க என்னை அணைக்க
என்னில் உறவாட காதல் மழையே....-
நிலவின் களங்கம் உலகம் அறியும் அதன் சுய ஒளியில்..
உன் நிறைகள் என்ன குறைகள் என்ன நீயாய் உன்னை உணரும் முறையில்...
எவரோ சொல்லி உன்னை அறியும் அறிதல் உன்னில் விடுத்து,,,
உனக்காய் உன்னை செதுக்கும் நிலையில் மனதினை நிறுத்து.-
என்னை மறந்து உன்னில் இணைந்தேன்,
உந்தன் நினைவில் என்னை புதைத்தேன்.
சுற்றும் உலகில் சுற்றம் இருந்தும் நித்தம் உந்தன் நினைவில் சுழன்றேன்.
வந்து மறைந்த வானவில்லாய் என்னில் மறைந்த சோகமெல்லாம் உந்தன் வரவில் நானும் உணர்ந்தேன்.
அகவையும் ஆக பருவமும் தேய உன் காதல் எனக்கு வரங்கள் என்றேன்.
இத்தனை மாற்றம் உலகம் சொல்லும் வரையரையில் காதல் என்று உன்னில் உரைத்தேன்..
நீ உணர்வாய், என் காதல் பெறுவாய், எனக்காய்
நீ வருவாய் என.....
-
எரியும் சுடர் அணைந்த பின்னும்
இருள் சூழ மனம் மறுக்கும்..
ஒளி தேடி மீண்டும் சுடரேற்றி
இருள் மறைத்து மனம் மகிழும்
உன் இடர் கூட இருள்தானே..
இருள் சூழ மறுக்கும் உன் மனம்
நெஞ்சில் இடர் சூழ மறுப்பதேனோ?-
என்னை யார் ரசிப்பார்
என ஏங்குகின்றாய்,
உன்னை நித்தம் ரசிக்கும்
காதல் துணையை
நீ அறிவாயா?
என்னை உற்று பார்த்தால்
உண்மை புரியும்,
உந்தன் அழகை ரசிக்கும்
அவன்(ள்) முகமும் தெரியும்..
.......இப்படிக்கு கண்ணாடி.....
-
எந்தன் கண்ணில் நீர் வரும்
அது உந்தன் பிரிவில் தானடி
எந்தன் இதழில் புன்னகை
உன் கொஞ்சல் கேட்டு தானடி
எந்தன் பயணம் தொடர்ந்ததே
உன் முந்தானை பிடித்து தானடி....
-