கைரேகை ,
கைரேகையில் எதிர்காலத்தை தேடாதே !
கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டிங்கு !
-
What's next ....
Keep moving ....
வாழ்க்கை,
வாழ்க்கையை நாட்களாக கழிப்பவன் குப்பையோடு குப்பையாக மக்குகிறான் !
வாழ்க்கையை நொடிப்பொழுதாக கழிப்பவன் வைரம் போல் இறந்தும் ஜொலிக்கின்றான் !
-
இறைவன்,
பல பெயர் கொண்டவர் !
பல உருவம் கொண்டவர் !
பல வழிபாட்டு முறைகள் கொண்டவர் !
என்பது மனிதர்களின் கற்பனையே !
உண்மை யாதெனில்,
அன்பே இறைவன் !-
Behind everything !
There is a reason !
Believe that !
And move on !
Keep moving !-
உன்னுடைய கலங்கலான ஏரியை !
உன் முயற்சி இல்லாமல் !
வேறு எவராலும் !
சுத்தம் செய்ய இயலாது !-
கற்றலும் மாயை !
கற்பித்தலும் மாயை !
இன்பமும் மாயை !
துன்பமும் மாயை !
பந்தமும் மாயை !
பகையும் மாயை !
வசதியும் மாயை !
வறுமையும் மாயை !
பிறப்பும் மாயை !
இறப்பும் மாயை !
ஜம்புநாதனை உணர்ந்துவிட்டால் !
அறுபட்டு போகும் இந்த மாயை !-
மயானத்தில் அருள்கின்றான் !
மனமேடையில் அருள்கின்றான் !
மாமன்னன் மகேசன்!
பார்க்கும் இடமெல்லாம்,
மனம் குளிர அருள்கின்றான் !
-
மக்கி போகும் மக்களே,
மன்னவன் வருகின்றான் பாருங்கள் !
மயக்கத்தில் இருக்கும் மக்களே,
மகேஷ்வரி வருகின்றாள் பாருங்கள் !
மனதை மயக்கும் அழகுடனே,
பவனி வருகின்றார் பாருங்களேன் !
-