Rajabalaji Kn   (Rajabalaji Nadanam)
47 Followers · 22 Following

Joined 14 December 2017


Joined 14 December 2017
25 JAN 2022 AT 19:44

When you have an ability but not doing it, You are not a loser but a sinner.— % &

-


25 OCT 2021 AT 12:10

பொய்யான புகழுரைகள் தேவையில்லை;
ஆனால், தகுதியானவற்றை பாராட்டுங்கள்.

-


12 AUG 2021 AT 19:30

வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்
சில வார்த்தைகளின் வலியும் அதிகம்.
மனம்விட்டு பேசுவதால் சில சந்தேகங்கள் தீரும் என எண்ணினால்,
அதுவே பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
எண்ணியதுரைத்தல் அவசியம் எனினும் அதனினும் அவசியம் நயம்பட உரைத்தல்.

-


30 JUL 2021 AT 21:45

நோக்கம் உன்னுடையதாயினும்
ஆக்கம் அவனுடையது!
சுனாமியில் பிழைத்தவனும் உண்டு
சுண்டெலியால் மாண்டவனுமுண்டு.
மதி மங்கும் போதும்
விதி ஓங்கும் போதும்
அவனிடம் சரணாகதியாவதொன்றே வழி.
நடப்பது நல்லதாகும்!
நல்லதே நடக்கும்!



-


15 MAY 2021 AT 23:17

சிரிப்பதில் கூட சிக்கனமா ? பழகுவதற்கு கூட பட்ஜெட்டா ?

அன்பு செய்வது கூட அட்வான்ஸ் கிரெடிட்டோ ?
இன்சொற்கள் கூட இன்ஸ்டால்மெண்ட்டோ ?

இங்கு பாசம் கூட பிசினஸ் தான்; நேசத்தின் ரிசல்ட் நெட் லாஸ் தான்.

தூய அன்பை செலவு செய்தால் ஆனந்தத்தை சேமிக்க முடியும்.

-


12 MAY 2021 AT 13:00

நோக்கிய இலக்கை மறந்துவிட்டு பாதிவழியில் வேறொன்றில்
கவனம் செலுத்தி
'நாய் வாய் வைத்தது போல்';
அதற்குள் தேடி வந்த நிலவு மறைந்துவிடுகிறது
பார்க்க வந்த பறவை பறந்து விடுகிறது.

-


3 MAY 2021 AT 21:50

Unless the asset is QUALIFYING ASSET, interest cannot be capitalised.
Unless the soul is QUALIFIED, god's grace cannot be capitalised.

-


16 MAR 2021 AT 22:02

கேட்டுப் பெறப்படும்
மதிப்பும் பாராட்டும்
இரவலுக்கு சமமானதே!

-


12 FEB 2021 AT 14:57

ஒரு வேப்பமரம் தென்னையாக மாற என்றும் ஆசைப்பட்டதில்லை.
ஒரு செம்பருத்தி ரோஜாவாக மாற என்றும் ஆசைப்பட்டதில்லை.
மாமரத்திற்கு மாங்காய் உருவாக்குவது எளிது; ஆனால், எத்தனை முயன்றாலும் அதில் இளநீர் உருவாகாது.
கனகாமரச் செடி எத்தனை முயன்றாலும் அதில் தாமரை பூக்காது.
நீ நீயாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்!
சமூகத்தின் பார்வைக்காக வாழ நினைப்பது நுழையாத காலனியில் காலை நுழைத்தது போல் துன்பம் தரும்.

-


1 FEB 2021 AT 22:03

The most highest dividend yielding investment is 'KNOWLEDGE'.
Enjoy the PROCESS!

-


Fetching Rajabalaji Kn Quotes