இரு கைகளுக்கு மட்டும் தெரியும் இன்றைய நாளின் அனுபவம்!!, இமயம் தொட ஒரு நாள் வரும் என்று காத்திருப்புடன்..,, அன்று மகிழ்ச்சியில் கரம் சேர்த்து வணக்கம் செய்ய மனம் ஏங்குகிறது!!!!
-
அழகான நினைவுகளின் சிந்தனையில் நான் மூழ்கி உள்ளேன், மூழ்குவது நான் என்று தெரிந்தும், மூழ்கி விடாமல், முழுமதி கொண்டு, மூன்று வரி சொல்வாயா எனக்காக??, அல்லது அது எதுவென்றும் எவரும் அறியாது என்னவன் தவிர்த்து., உன் முன்னின்று கேட்கிறேன், மூவரி சொல்லி, என் காதலின் முகவரி படைப்பாயா.!!!
-
நான் வாழாத நாட்களை, வருடத்தின் மூலமாக, இந்நாள் வரை கழித்து கொண்டிருந்தேன், ஆனால் இந்நாள், எதனால், அவளால் நான் வாழ்கிறேன் என்று உணர்த்தினாய்.., அனைவரும் அறிவதில்லை, இந்த உணர்வையும், இந்தப் பதிப்பினையும், அவள் மட்டும் அறிவால்.....!!!!
-
இரவின் நிழலில் உன்னை தேடி ஏமாற்றம் கொள்ளாதே, விடியல் வெகு தூரம் இல்லை, கொஞ்சம் காத்திரு....!!!!
-
எண்ணங்கள் என்னும் அலையில் எண்ணற்ற பல கனவுகள் வண்ணங்களாய் அலைபாயும்,, ஆனால் அவை அனைத்தும் எதிரே நின்ற போது நான் அறிந்த உண்மை ஒன்று, எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை மட்டுமே தரும்...!!!
-
கடவுளிடம் கேட்டு கேட்டு அழுத்து விட்டது, என் கண்களும் பலமுறை அழுது விட்டது, மனம் விரும்பி கேட்கிறேன் மரணம் கொடு, என் மனம் உடையோர் மனம் உடைகிறார்கள், பின்பு எதற்கு இந்த மானிட பிறவி, அவளை தினம் காண நினைத்தேன், ஆனால் அவள் கோபம் என்னை பிணமாக மாற சொல்கிறது. கடவுளே நீ உண்மை என்றால் என்னை பிணம் ஆக்கு, அவளின் கோபத்துக்கு என் பிணத்தை தீனியாக்கு.,
-
உன்னை சுற்றி நடப்பதை உனக்குள் தேக்கி வைத்து கனம் கொள்ளாதே, பருந்தாக வானத்தில் பறக்க வேண்டும் என்றால், வாத்துகளுடன் நீந்துவதை நிறுத்து, பொம்மையாக தலையாட்டுவதை விட, தலைகனத்துடன் நிமிர்ந்து நில்...!!
-
எழுதப்படாத வார்த்தைகள், எழுந்து நின்று என்னிடம் கேட்டது, என்னையும் உன் கவிதையில் சேர்த்துக் கொள் என்று, நிச்சயம் உன் கவிதையில் அவள் இருப்பாள், உன் தமிழ் மொழியின் தொடுப்பால், அவளின் கவிதையில் நானும் இருப்பது, என் மொழி வரலாற்றின் சிறப்பது, இனியும் நான் நினைப்பதை உன்னிடம் எப்படி கொடுப்பது....????
-
நீண்ட காத்திருதல் பிறகு, நீலமான நிமிடம் இல்லை என்றாலும், நித்தம் நித்தம் நகரும் நிமிடத்தில், நீண்ட பயணமாக, நீயும் நானும் இருந்த நிமிடம், என்னை நாணம் கொள்ள செய்கிறது, என்னை சிரிப்பில் கடக்க வைத்த சித்திரமே, நீ ஒரு சிலையென்று உணர்ந்தேன், உன்னை செதுக்கும் சிற்பியாக மாற காத்திருக்கிறேன், அனுமதிப்பாயா!!!
-
இடைவிடாமல் ஏங்குது என் இதயம், நமக்குள் எதற்கு இந்த இடைவெளி என்று, நல்லதொரு அன்பின் தமிழ் வார்த்தை இருப்பதோ மூன்று, அதை உன் வழியே என்று நான் அறியேனோ!, அன்றே எனக்கு நன்று ...!!!!
-