RAJA JYO   (கருவாச்சி 💔 காதலிசம்)
34 Followers · 34 Following

read more
Joined 28 December 2018


read more
Joined 28 December 2018
14 MAY AT 15:52

அழகான பூக்களையெல்லாம்
ஓரம் கட்டிவிட்டு
ஒற்றை பூ பூத்து சிரிக்கிறது ஒய்யாரமாய்,
அவன் மடியில்...

-


14 MAY AT 15:30

நாமாக இருந்த இடத்தில்,
இன்று நீயும் இல்லை நானும் இல்லை...
பாவம் காத்துக்கிடக்கிறது...
நம்முள் இருந்த காதல்....

-


14 MAY AT 6:47

புறம் பேசி அலைவதை விட
இத்தகைய மனநிலை அமையப்பெற்றால்,
நாம் உயர்ந்தவர்கள் தானே!!!

-


14 MAY AT 6:46

அவரவர் அவர் விரும்பியபடி வாழ்ந்து கொள்ளட்டும்...
அவர்களுக்கு வெளியே சொல்ல முடியாத,
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு
சோகங்களும் துயரங்களும் இருக்கும்...
அவர்களைக் கண்டால்
கொஞ்சம் புன்னகையுடன் உரையாடுங்கள்...
முடியாவிட்டால் மௌனமாக கடந்து விடுங்கள்..
அது போதும்
உங்கள் வாழ்க்கை உங்களுக்கானது
அவர்களது வாழ்க்கை அவர்களுக்கானது....

-


14 MAY AT 6:42

அவள் கல்விக்காக
வெகு தொலைவில் சென்று
தனியே தங்கி இருந்து படிக்கிறாளா
பரவாயில்லை
விட்டுவிடுங்கள்
இழிவு படுத்த வேண்டாம்....

-


14 MAY AT 6:40

அவள்
பேரப்பிள்ளைகளை கண்டவுடனும்
தன் கணவனோடு வீதியில் கைகோர்த்து நடக்கிறளா
பரவாயில்லை
விட்டு விடுங்கள்
இழிவுபடுத்த வேண்டாம்....

-


14 MAY AT 6:38

அவன் முப்பது வயது கடந்தும்
ஒரு வேலையும் கிடைக்காமல்
அலைந்து கொண்டிருக்கிறானா
பரவாயில்லை
விட்டுவிடுங்கள்
இழிவு படுத்த வேண்டாம்....

-


14 MAY AT 6:36

திருமணம் முடிந்து
5 ஆண்டுகள் ஆகியும்
இன்னும் குழந்தை பெறவில்லையா
பரவாயில்லை
விட்டுவிடுங்கள்
இழிவு படுத்த வேண்டாம்...

-


14 MAY AT 6:34

ஒரு பெண்
பல காலம் சென்றும் திருமணம் முடிக்கவில்லையா
பரவாயில்லை
விட்டுவிடுங்கள்
இழிவு படுத்த வேண்டாம்....

-


14 MAY AT 6:32

ஒரு தம்பதி 50 வயதில்
குழந்தை பெற்றுக் கொள்கிறார்களா....
பரவாயில்லை
விட்டுவிடுங்கள்
இழிவு படுத்த வேண்டாம்....

-


Fetching RAJA JYO Quotes