உன் கண்களுக்கே கவிதைகள் வரைந்திடவே மை பூசி மனதினை எடுத்தாய் இதழ் சாயம் பூசி இதயம் எடுத்தாய் இரு விழி பார்வையில் என்னை தொலைத்து நிற்கும் பொழுதில் ஒரு புன்னகை செய்து மொத்தமாய் என்னை மறந்தேன் நானும் இது என்ன மாயம் இவள் வசம் இதயம் போகிறதே கதைத்திட ஆசை தான் நீயும் அங்கே நானும் இங்கே உன் குரல் கேட்கவே இத்தனை நாட்கள் நான் ஏங்க ஒரு முறை அழைப்பாயா ❤️
-
தூரத்தில் நீயும் மழை சாரல் தூரவே ஒரு ஓரமாய் நான் நிற்க நிமிடம் நகர்ந்து செல்ல உன் இதழ் சிரிப்பில் என்னை தொலைத்து சுற்றி இருக்கும் குளிரில் என் உடல் தக தக என இருக்க, என்ன மாயம் செய்தாய் நீ சிரிப்பில் என்னை சிறை பிடித்து இதயம் உன்னிடம் கொடுத்து விட்டேன் கதை பல கேட்டு நான் இருக்க உன்னை போல் யாரும் இங்கே இல்லை யாவும் பொய் தான் வர்ணிக்க வார்த்தைகள் தொலைத்து இருக்கும் நானும் உன்னை கண்ட நொடியில்
-
இன்றும் நீ நிலவாய் வானில் இருக்க உன்னை காணவே நான் காத்திருக்க என்ன செய்தாய் நீ இரவில் வருகிறாய் இதயம் எடுக்கிறாய் மேகம் நடுவே மறைந்து கொள்கிறாய் மனம் விரும்புதே உன்னை காண வரம் ஒன்று கிடைக்குமா வதனம் காண ❤️ இப்பிறவி உன் இதழ் சாயம் படியாமல் தான் முடிந்திடுமோ
-
அவளிடம் கூறிட ஆசை தான் காலமும் கடந்து விட்டதே, நொடி பொழுதில் மாறிடும் காலம் நடுவில் வாழும் காதலும் கடந்த கால நினைவுகளும் இங்கே சாபமா வரமா அறியாமல் மனம் என்னும் குழந்தை விளையாட இங்கே தீர்ந்து போன நேரம் இறுதியில் அவளின் நினைவும் அவள் உதிர்த்து சென்ற வார்த்தைகள் மட்டுமே சுவடாக
-
கடவுளும் இவளை எதற்காக படைத்தானோ அவன் அறியவில்லை எனக்காக அவன் படைத்ததை மறந்தும் போனான் இத்தனை வருடம் பல ஆசைகள் என்னில் இருக்க மொத்தமாய் இவள் வரவே என்னை நான் தொலைக்கிறேன் கதைக்கிறேன் என்னை மறந்து இவள் போல் ஒரு உறவு தான் கிடைத்திடுமோ, எத்தனை வரம் தான் கிடைத்தாலும் இவள் போல் தேவதை மீண்டும் தான் வருவாளோ, இவள் மீது அத்தனை பாசம் சொல்ல முடியா அளவில் அணைத்து கொள்ளும் அளவில் என் மடியில் அவள் உறங்க நானும் உணர்கிறேன் தாய்மை உணர்வை. காதலி கொடுத்த வலிகள் நண்பன் இருந்து ஆற்றினாலும் வடுவாய் இருக்கும் இவள் அருகில் இருக்க அது கூட காணாமல் போகும் என்ன தவம் செய்தனை இவள் என் உயிராய் கிடைக்க

இரு விழி என்ன செய்கிறது வியந்து போகிறேன் நானும் மறந்து போகிறேன் யாவும் போதுமே இதயம் தான் தாங்காதே, இதழ் மறைத்து நீ இருக்க இதயம் என்னுள் தான் இருக்கிறதா அச்சம் என்னுள் இத்தனை மாயம் செய்கிறாய் எதற்காக அழகே
-
கதைத்திட நான் காத்திருக்க ஏனோ தேவதை அருகில் இல்லை அவளும் சுற்றி திரிய இந்த பூலோகம் கொண்ட ஆசை யோ, நானும் தனியே அவள் வருகை தேடி நித்தம் நித்தம் காத்திருக்கும் மனதும் அவளின் ஒரு சிரிப்பில் என்னுள் கொண்ட தேடல் காணாமல் போவது என்னடி இத்தனை மாயம் செய்கிறாய் மறைந்து கொள்கிறாய் தேடுகிறேன் தினம் தினம் உன்ன தரிசனம் காண
-
அவளோடு தொலைத்த நியாபகங்கள் மனதில் வடுவாக இந்த பயணம் என்னும் மாயை கடந்தும் அவள் நினைவு என்னும் பயணம் தொடரவே சில நிமிடம் மூழ்கி போகிறேன் காகிதத்தில் அவள் எழுதிய கடைசி வாசகம் காணும் போதெல்லாம் மீண்டும் ஒரு சந்திப்பு கிடைக்காதா முதலில் அவளை பார்த்தது போல் ஒரு முறை கிடைக்காதா மீண்டும் கல்லூரி நாட்கள் செல்ல இயலுமா, பல ஆசைகள் ஆன்மா போல் சுற்றி திரிய காதல் இல்லா அவளின் நட்பும் கடந்து செல்ல முடியாத நினைவுகளும் அவளோடு பேசிய மணித்துளிகள் மரணம் என்னும் ஆழி சூலும் வரை மறையாது கண்மணியே!
-
தீரா மோகம் நீ காட்ட தீரா காதல் நீ செய்ய தீரா காலம் வேண்டுமே இங்கே முதலும் இல்லை முடிவும் இல்லை இதழ் இதழ் சேர சொர்கம் என்னும் மாயை உலகம் அழைத்து செல்லவே நீயும் நானும் நிழலை போல நிஜமோ யார் அறிவார் காதலின் புரியா பாடம் எடுத்து அதில் முதலாய் நீ நான்!
-