நம் அறிவை அறியாவிட்டால்
அறிவில்லா அறிவுஜீவிகளின்
அதட்டலுக்கு ஆளாகநேரிடும்!
-
part time poet& lyricist by Passion and l... read more
வெஸ்டர்ன் ஸ்டைல் வெண்ணிலா!
மயிரிழையில் மாடர்ன் நிலையை அடைய ஒரு சிறந்த வழிதான் "Hair straightening"-
ஓர் அழகான மணல் வீட்டில்,
அவன் கட்டிய மாடுலர் கிச்சனில்,
அவனின் அவள்,சமைத்த சாப்பாட்டில் கல் இருந்தது😊-
Die hard fans என்னும் salary hikers!
யார் சிறந்த நடிகர் என்று நடந்த வலைத்தள வாய்சவடால் சண்டையில்,
சத்தமில்லாமல் உயர்ந்து கொண்டே சென்றது நடிகர்களின் சம்பளம்,
"பெட்ரோல் விலையை போல்"-
வாசனை வாழ்வியல்
அவள் வாசத்தில் நான் சொக்கிபோகாத நாட்களே கிடையாது
அன்று ஏனோ தெரியவில்லை
அவள் சென்ட் அடிக்க மறந்துவிட்டால் என்று நினைத்தேன்,
ஸ்ரீதேவியை பார்த்தபின் இருக்காது என்று மனம் சொன்னது,
இல்லை இல்லை... Covid டெஸ்ட் எடுறா மூதேவி என்று மூளை சொன்னது😊
-
Covi-காதல்
தனிமனித இடைவெளி விட்டு கட்டிப்பிடித்த காதல் ஜோடியின் நடுவில் ஒரு மூன்று சக்கர ஆட்டோ சர்ர்ர்ரென்று சென்றது
ஆட்டோவின் இடது புறம் ஒருவரும்,
வலது புறம் மற்றொருவரின் உதடுகளை,
முறையே உரசி சென்றது ஆட்டோ😊-
மிகைப்படம்
அவள் சோம்பல் முறிக்கும் புகைப்படத்தில் சீக்கிக்கொண்டது "கேமரா"😊-
அன்புள்ள detox
காதலில் இதயத்திற்கு பதிலாக
கிட்னி திருடபட்டிருக்குமானால்
"I Will die for you" என்ற வாக்கியத்திற்க்கு பதிலாக
"I will dialysis for you"
என்ற நிலை உருவாகியிருக்கும்😊-
Co-மார்க்கெட்
மார்க்கெட்டில் மக்களின் எழுச்சியை
பார்த்த கொரோனா வைரஸ்,
தன்னுடைய மார்க்கெட் குறையாமல் கோடியை தொடும் என்று சந்தோஷப்பட்டது!-