ராஜ ராஜேஸ்வரி வெ   (_வெ.ரா.)
325 Followers · 99 Following

read more
Joined 28 February 2019


read more
Joined 28 February 2019

When you want something the whole universe conspires to help you achieve it. - The Alchemist by Paulo Coelho.

-



எனக்கு நிலவை
தொட
ஆசையிருக்கிறது...

அடடே...!
அங்கு பாருங்கள்

நிலவை விட
வானம் பெரிதாய்
இருக்கிறதே...

சரி
வானத்தையே
தொட்டுவிடலாமே...!!

-



வலது கால் செருப்பை இடது காலிலும்
இடது கால் செருப்பை வலது காலிலும்
மாற்றி அணிந்ததுதான்
நான் செய்த முதல் தவறு...
மீண்டும் மாற்றி அணிந்ததுதான்
நான் செய்த முதல் திருத்தம்...

-



மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள்
புற்களின் பெயர் அறிந்து அதை மேய்வதில்லை
அது கொடுக்கும் தெம்பை அறிந்து மேய்கிறது...!

-



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

நீடூழி வாழ்க!!!!

-



அறிவோ
உணவோ

பரிமாறுதலும்
ஒருவகையான
வழிபாடுதான்...

-



ஆழமாக தோண்டுகின்றேன்

என்றோ பெய்த

மழையின் ஈரம்

இன்னும் அந்த மண்ணில்...

-



சாளரத்தில்
தூசுகள்
படிந்து கிடந்தன

அதில் எழுதினால்
அச்சு அப்படியே இருக்குமே...

எழுத அதிக ஆசை

பெயரை
எழுதினேன்

அழகாக இல்லை
அழித்துவிட்டேன்...

அழிந்தும் போனது

தூசின் மேல்
எழுதியதாலோ...




-



மழைக்காலத்தில்
கண்ணில் படுவதேயில்லை
சாலையில் இருக்கும்
தூசுகள்...

-



வாழ்க்கை வாள் வீசினால்
உங்களுக்கு தெரியவில்லை என்றால்
கற்றுக்கொள்ளுங்கள்
எதிர்த்து சண்டையிடுங்கள்

வாழ்க்கை சிலம்பம் சுற்றினால்
அதையும் கற்று
நீங்களும் சுற்றுங்கள்

கற்றவர்கள்தானே
களம் புக முடியும்.
எதிர்க்க பயந்தால் எப்படி???

-


Fetching ராஜ ராஜேஸ்வரி வெ Quotes