பணம் சம்பாதிக்க நீங்கள் படும்பாட்டைவிட, அந்தப் பணத்தை உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுக்க புத்திசாலியான நிபுணர்கள் இரவு பகலாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள். குறைந்த நிதி அறிவால்தான் துன்பமே தவிர குறைவாக சம்பாதிப்பதால் அல்ல!!
-
நாம் கொடுப்பதையெல்லாம் திரும்பப் பெற முடியும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள்! மென்மையான சதையாலான இதயம்தான் பலருக்கு இரும்பாக இறுகிப் போய்விடுகின்றது!!
-
இன்று நம் உயிர் பிரிந்தாலும், நம் அன்புக்குரியவர்களும்,, நெருங்கிய நண்பர்களும் அடுத்த வேளை உணவை உண்டு தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டியிருப்பது யதார்த்தம். கதைப் புத்தகம் அல்ல வாழ்க்கை!
-
மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட, மரணத்திற்கு முன் நாம் உயிர்ப்புடன் இருக்கிறோமா என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம்!!
-
வாழ்க்கையில் வெற்றியையே காணாததுபோல பயிற்சி செய்யுங்கள்! ஆனால் செயல்படும்போது என்றுமே தோல்வியைக் காணாதது போன்று செயல்படுங்கள்!! வெற்றி நிச்சயம்!!
-
யாரையும் என்னால் காயப்படுத்த முடியாது என்பது கருணையுள்ளம் என்றாலும், மற்றவர்களுக்கு எளிதான இலக்காகிவிடுவீர்கள்!
நமக்கான தெளிவான எல்லைகளை வகுக்கவில்லையென்றால் மக்கள் நம்மை கருவேப்பிலையைப் போலத்தான் பயன்படுத்துவார்கள்!!-
அவர்களுக்கு என்னைப் பிடிக்கும் அல்லது என்னைப் பிடிக்க வைக்க முடியும் என்பதல்ல தன்னம்பிக்கை! அவர்களுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் நான் நன்றாக இருப்பேன் என்பதுதான் தன்னம்பிக்கை.
-
நம் விசுவாசத்தை காலம் நிரூபிக்காமல் போனாலும் சூழ்நிலைகள் கட்டாயம் நிரூபித்துவிடுகின்றன!
உணர்வுகளுக்குள் சிக்காத அமைதியான மனம் எந்தச் சூழ்நிலையையும் நிர்வகிக்கும் திறன் கொண்டது!!-
எப்போதும் உண்மையையேச் சொல்லும்போது, எதையும் நினைவில் வைத்துக் கொண்டேயிருக்க வேண்டியதில்லை!
பொய்யால் ஆறுதல் அடைவதைவிட, உண்மையால் புண்பட்டுவிட்டுப் போகலாமே!!-
நம் இதயத்திற்குள் ஆழமான தழும்புகளை ஏற்படுத்த நம் பாசத்திற்கும், நேசத்திற்கும் உரியவர்களால் மட்டுமே முடியுமே தவிர, நம் எதிரிகளுக்கும்கூட அது சாத்தியப்படுவதில்லை!
-