அன்புள்ள காதலிக்கு..
உன் வீட்டு முற்றத்தில் நின்றபடி
இரவு வானில் நீ காண்பது
எல்லாம் - நட்சத்திரங்களில்லை
நிலவளவு நான்
வெளிப்படுத்திய காதலில்
தவறுதலாகவோ, சில
நேரங்களில் தெரிந்தோ,
மறந்தோ, மயக்கத்திலோ
உன்னிடம் நான்
காட்டிக்கொள்ளாத
காதலின் மிச்சங்கள்...
நம் காதல் எச்சங்கள்...-
எனக்கு சொல்ல
முடியாத சில
காதல்கள் இருந்தது,
அவளுக்கு கடந்து
சென்ற காதல்கள்
இருந்தது - இருவரும்
அன்றொரு நாள்
முனு, முனுத்தப்படி
காதல் பரிமாறிக்
கொண்ட பிறகு தான்
புரிந்தது
அப்போது தான்
இருவருக்கும் 'முதல் காதல்'
மலர்ந்தது என்று...-
மாய மேகங்கள் சூழ்ந்த
என் அன்பு வானில்
அவ்வப்போது எட்டிப்
பார்த்துச் செல்லும்
தூர தேசத்து
நட்சத்திரமில்லை அவள்..
என் இருப்பை உறுதி செய்ய
ஈர்ப்பு நிலையை சமனாக்க
எனக்கெனவே 'நேந்து விடப்பட்ட
நிலவு' அவள்.....-
உங்கள் சந்தேகங்களை
தீர்த்துக் கொள்ள
நீங்கள் வைக்கும் தேர்வுகளில்
ஒருமுறை பங்கேற்கலாம்,
இருமுறை பங்கேற்கலாம்
ஓயாமல் எல்லாம் பங்கேற்க
முடியாது - ஏனென்றால்
எனக்கு தனிப்பட்ட
வேலைகள் இருக்கிறது..
பிறரை மதிப்பிடும் அளவிற்கு
நான் ஒன்றும்
உங்களை போல்
வெட்டியாக இல்லை...-
முற்றும் துறந்ததாய்
சொல்லிக் கொள்பவர்களுக்கு
எல்லாம் - நிச்சயம்
ஒரு அழகிய காதல் கதை
இருந்திருக்கிறது...-
உயிர் போகும் வரை
உன்னையே காதலிப்பேன்
என சொல்லியதோடு
எனது அத்தியாயம் முடிந்தது..
அவளோ..
உருக, உருக என்னை
காதலித்து
'சிந்துபாத்' கதையை போல
தொடர்ந்து கொண்டே
இருக்கிறாள்...-
செய்த ஒன்றை மறைத்து
அதே குற்ற உணர்வுடன்
வாழ்வது - வாழ்க்கை
முழுவதையும் சிறையில்
கழிப்பதற்கு சம்மாகும்...
அதற்கு மாறாக
அத்தனையையும்
கொட்டி தீர்த்து விடுங்கள்
இதைவிட எளிய முறையில்
அந்த குற்றத்திலிருந்து
'பிணை' பெறும் வழி
இதுவரை யாராலும்
கண்டறியப் படவில்லை...-
என்னை சுற்றி
கதாப்பாத்திரமாகவே
மாறி விடும் நடிகர்கள்
உலவிக் கொண்டு
இருக்கிறார்கள்...
பல நேரங்களில்
அவர்களின் நடிப்பை
பாராட்டுவதற்கு பதிலாக
அதில், மெய் மறந்து
நான் ஏமாந்து கொண்டே
இருக்கிறேன்...-
உன் குறுஞ்செய்திக்காக
காத்திருக்கும் பலரில்
நானும் ஒருத்தனாக இருக்க
எனக்கு துளியும் கூட
ஆசை இல்லை...
'காத்திருக்கும் எண்ணத்தையே'
காத்திருப்பு பட்டியலில்
போட்டவனாக, நான் இருக்கவே
விரும்புகிறேன் - எப்போது
அதை, நீ புரிந்து கொள்வாயோ..
-
என் நீள வானத்திற்கு
ஒப்பாக - நான்
நினைத்த 'அவளால்'
எப்படி தான்
எல்லைக்கோடுகள்
வரைந்து, என்னை
காதலிக்க முடிந்ததோ...!!!-