சந்திப்பு
எங்கு கண்டாலும் ஒரு புன்னகை!
மறைக்க முயன்றும் குறைவில்லாமல்
வெளிவரும் சிறு புன்னகை
பேசத் துடிக்கும் உதடுகளை
புன்னகைத் தடுக்கும் துரதிஷ்டம்
பல முகங்களுள் ஒரு முகம்
தெரியும் அதிசயம்!
இரைச்சலும் இசையாய்
இனிக்கும் ஆச்சிரியம்!
குரலிசைக்கு செவி சாய்த்து
மதியிழக்கும் இனிய இன்னல்
விழியோடு விழி சேர்க்க அஞ்சி
சேராமல் பிரிய மனமுமில்லாமல்
இருவிழி கோர்த்து பிரியும்
ஓர் நொடிப் பொழுதில்
விழிமலரில் துளிர்விடும்
பனித்துளி தான் காதலோ
விழியசைத்து சம்மதம்
தெரிவிக்க தாமதம் ஏனோ
என் காதல் மானே!-
Purushothama Shashank
(BrOkEn PeN✍)
135 Followers · 7 Following
brokenpen@instagram
Joined 15 March 2018
30 APR 2022 AT 13:40
3 APR 2022 AT 3:48
உன் நினைவில் என் இறுதிப் படைப்பு
என் மனதில் உன் இறுதி நினைவு
உன் செவிகளில் என் இறுதிக் குரல்
என் இதயத்தில் உன் இறுதி துடிப்பு
என் காதலை மாற்ற விருப்பமில்லை
உன்னை துன்புடுத்த துளியளவும் ஆசையில்லை
வெவ்வேறு பாதைகளில் பிரிவு
இப்பிரிவும் ஒருவகை சுகம்தான்— % &-
3 OCT 2020 AT 10:29
உள்ளம் உணர்வுகளை உறங்க விடாமல்
உவகையை உளி கொண்டு உடைத்து
உதிரம் சிந்த வைக்கிறது!-
6 SEP 2020 AT 23:40
Don't ask
Why are you asking more and more questions?
Ask yourself
Why the hell you don't have a proper answer?-
6 SEP 2020 AT 23:38
உன் கூரிய வேல் விழிகள் என் இதயத்தை ஊடுருவிச் சென்றது!
உன் புன்னகை என்னை பித்தனாக்கியது!
காதல் பித்தனாக்கியது!-