Priyasri3024   (கவி_பிரியா)
0 Followers · 1 Following

read more
Joined 23 March 2024


read more
Joined 23 March 2024
29 MAR AT 21:49

நீ உனது குட்டியை
அரவணைப்பது போல்
என் தாய் எனை
அரவணைத்திருந்தால்
என் வாழ்க்கை இவ்வாறு
இருள் சூழ்ந்திருக்காது..!

-


29 MAR AT 20:56

வாழ்வில்,..
முயன்று பார்த்தால்
முடியாத ஒன்று
இவ்வுலகில் இல்லை!!

-


29 MAR AT 19:23

இக்கட்டான சூழலில்
நன்கு,
சிந்தித்து செயலாற்றினால்
நன்மை பிறக்கும்;

-


29 MAR AT 18:52

உன்னை காண மறுக்கிறது
என் கண்கள்..
உன்னை மறக்க மறுக்கிறது
என் இதயம்;

-


28 MAR AT 11:27

மழைச்சாரல் விழும் பொழுது,
மனம் உன்னை கேட்குதே!!
அன்பே..
நீ என் அருகில் இருந்தால்
இரவு மட்டும் போதுமே
பகல் வேண்டாமே..!
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்..!

-


28 MAR AT 11:23

சிவந்த ரோஜாவே..,
உயர்ந்த காதலின்
அடையாளமாகிறது!!

-


26 MAR AT 22:22

பிறரை,
அழுக வைத்து
பார்க்கும் நீ
மனிதனா?

-


26 MAR AT 18:21

படித்தவருக்கு தான் படித்த
கல்வியே சிறந்த ஆயுதம்..!
ஆனால்,
கவிஞருக்கு தான் எழுதும்
கவியே சிறந்த ஆயுதம்..!

-


26 MAR AT 17:39

வெண்ணிலவே,
உன் அருகில் இருக்க
‌‌மேகமாய் மாறினேன்;
உன்னை காண ஆயிரம்
கண்கள் போதாது!!
இவ்வுயிர் உனக்காக
வாழ ஏங்குகிறது!!

-


24 MAR AT 19:00

உன் அழியா அழகினை
‌ பார்த்தவாறே
என் கண்கள் வேர்த்தது;
உன் மெய்பிக்கும் உருவம்
அதை கண்டு,
நான் மெய்சிலித்தேன்;
உன் அழகை காண வரும்
பக்தர்களோ கோடி,
ஆனால் நீயோ வஞ்சிக் கொடி!!

-


Fetching Priyasri3024 Quotes