priya raj  
263 Followers · 19 Following

I write what I think
First cry 06_11_2001
CA student 😎
Joined 24 April 2018


I write what I think
First cry 06_11_2001
CA student 😎
Joined 24 April 2018
30 JAN 2024 AT 11:48

இரவொன்று வந்தது;
அது நகரவில்லை
உன்னை காண என் கண்கள் ஏங்கினவோ??
சற்றே யாரும் அறியாமல் - உன் புகைப்படத்தை அரவணைத்து,
உன்னை உண்மை என நம்பி ஏமாந்து,
உறங்கி !!
இரவொ நகர்ந்தது!!

-


14 APR 2023 AT 22:01

உன் பார்வையில் என்னை காணும் பொழுது
என் துன்பங்கள் காணாமல் போனதன் காரணம் யாது?
இறைவனிடம் வேண்டிய நாட்கள் கிடைக்கும் எனில்
நான் வேண்டாம் என மொழிவேனோ?
பழுது அடைந்த என்னை
புதுபிக்க வந்த என் பொக்கிஷம் நீயோ?

-


22 SEP 2022 AT 20:22

என் இனிய புத்தகமே !
நீ இன்றி கண்விழிபதுமில்லை ,
நீ இன்றி நான் கண்மூடுவதும் இல்லை ,
உன் அழகை காணவும்
உன்னை படிக்கவும்,
கோடி கண்களும் போதவில்லை.
நீ இன்றி வாழும் நாட்கள்...
நீர் இன்றி வாடும் செடிப் போல
உன்னை வர்ணிக்க வார்த்தை தேடி,
உன்னிடமே மீண்டும் வந்தேன்
என் இனிய புத்தகமே!

-


6 MAY 2022 AT 12:08

தலையணை என்பதால் என்னை அணைக்கிறாய் ?
இல்லை தலைவிதியே என்று அணைக்கிறாய் ?
என்னவோ, நினைத்துக்கொள்
என்னை விட்டு விடாமல் என்றும் அணைத்துக்கொள்!!

-


2 MAY 2022 AT 13:39

பாசம் வைக்க யாரும் இல்லை என்று,
பாதி காலம் தவித்தாய்!
பாசம் வைத்து அழுதே,
மீதி காலமும் ஒழித்தாய்!
வேஷம் போடும் உலகினில்,
பாசம் வைப்பதை தவிர்த்தாள்
தனிமையே இனிமையாகும் !!!

-


22 MAR 2022 AT 11:49

என்னை போல ஒருவனை வெளியில் தேடிய தாலோ என்னவோ,
என் தனிமை எவ்வளவு அழகானது
என்று உணராமல் போனேனோ!!

-


12 JAN 2022 AT 21:38

அண்ணாந்து பார்த்தேன்,
பார்த்த என் கண்களும் பூத்து விட்டது,
என் கண்ணம் சிவந்து விட்டது,
நீ வருவாய் என்று.....
நீயோ , கண்ணாமூச்சி ஆடுகிறாய்,
மரங்கள் நடுவே உன் சாயல் பார்த்தேன்
பார்த்தவுடன் மேகங்களுக்குள் மறைந்துகொண்டாய்,
போதும் உன் விளையாட்டு!!
விளையாட்டு வினையாகிவிடுவதற்குள் வந்துவிடு
என் வெண்ணிலவே,
உன் வருகைக்காக காத்திருக்கும் பெண் நிலா நான் .

-


4 DEC 2021 AT 20:36

TRUST
It is the only ray of hope,
Which holds any kind of relationship:)

-


11 NOV 2021 AT 14:09

There are lots of people to spread negativity , Then why you ?
Be the one who spreads positivity!

-


17 OCT 2021 AT 10:35

என் இனிய காதலா!
உன் கண்கள் என்னை ரசிக்கும் வேலையில் தான்,
நான் என்னையே காதல் செய்தேன்!!

-


Fetching priya raj Quotes