Prema Sundari   (ilamkavi)
23 Followers · 29 Following

read more
Joined 10 November 2020


read more
Joined 10 November 2020
24 JAN AT 18:13

ஆம்...
காதலிப்பதால் தான் கவிதை எழுதுகிறேன்..
தமிழை.. கவியை.. காதலை..
காதலிப்பதால் தான் கவிதை எழுதுகிறேன்..

-


24 JAN AT 4:49

கதறி அழுதிட மனம் அழைக்கிறது
வலிகளை பகிரவோ ஆளில்லை..
எண்ணமெல்லாம் எழுத்தாய் வீற்றிருக்க
வரிகளை பதிவிடவோ உரிமையில்லை..

-


12 JAN AT 17:40

என்னை அறியாமல் சிரித்தேன்....
உன்னை நினைத்ததால்..
என்னை அறியாமல் அழுகிறேன்..
உன்னை நினைப்பதால்..

-


7 JAN AT 23:31

நீண்ட கால பிரிவில்
மறந்து போன சண்டை
மறைந்து போன வலிகள்
மீண்டும் உனைக் கண்டால்
காட்டிய காதலே கண்முன்னே
காரணம் வரும் அதன் பின்னே..

-


3 JAN AT 13:04

வட்டப்பாதையில் ஓடும்
இரயிலின் பயணிகள் நாம்..

இன்ஜின் ஒலியை இயந்திரம் எழுப்பும்..
பயண அழுப்பை ஷிப்ட் கொடுக்கும்..
நொறுக்குத் தீனிகளை கம்பெனியே அளிக்கும்...
பயண பாதை மாறாமல் சூழ்நிலை நகர்த்தும்..

-


2 JAN AT 22:28

ஆள் பார்த்து வயது பார்த்து
பார்க்கும் பணி பார்த்து பதவி பார்த்து
யாரிடமும் பேசவில்லையே நான்..
அன்பையும் புன்னகையும்
ஒருதலை பட்சமாய் காட்டவில்லையே நான்..
ரகசியங்களை மறைத்து பேசும் போது,
உணவகத்திற்கு செல்ல அழைப்பு விடுக்காத போது,
கோயிலுக்கு யாருடனோ செல்லும் போது,
Friends for ever எனும் பதிவில்
ஒரு மூலையில் கூட நான் இல்லை எனும்போது,
புரிகிறது....!

நான் யாருக்கும் யாருமாயும் இல்லை🙃

-


26 DEC 2023 AT 20:42

பேசிப் பழகிய திங்களோ சில..
ஊசி அளவும் காணவில்லை பிழை..

நேசிப்பு எனும் ஆயுதத்தாலே
வீசிச் சென்ற அன்பு நெஞ்சிலே..

யோசித்துப் பார்த்தாலும் ஆச்சரியம் தான்!
சுவாசித்துப் பார்த்தாலே பரவசம் தான்..

டாடா சொல்லித் தொடங்கிய பந்தம்..
டாடா பவர் பரிசாய் தந்த சொந்தம்...

-


14 DEC 2023 AT 20:36

தானியங்கி இயந்திரத்தின் பெருக்கத்தினால்
இயந்திரங்களாகவே மாறி வரும் நாம்...

-


6 DEC 2023 AT 17:42

கடந்த கால எதிர்கால
கற்பனை நிகழ்வுகள்
கொல்லுமே நிகழ் இன்பத்தை..

-


15 NOV 2023 AT 9:19

முறிவும் பிரிவும் மட்டுமே
காதல் தோல்வியல்ல..
காதலை சொல்லாமல் இருப்பது..
தாமதமாக தன் காதலை பகிர்வது..
காட்டும் காதலை உணராமல் இருப்பது..
யாவும் காதல் தோல்வியின் பங்காளிகள்..

-


Fetching Prema Sundari Quotes