8 MAR 2019 AT 22:54

பிண்ணிய கூட்டத்தில் நான்
யார் என்று தீர்மானிக்காதே..
படைத்த கடவுளாய் நான்
யாரென்று அறியப்பட்டேன்
பணத்தால்,புகழால் ஓர் மூலையில்
கடைசியில் நிற்கிறேன்
வெற்றி என்னும் வழுவான கயிரால்
உச்சத்தைத் தொடுவேன்
அண்ணாந்து பார்க்கும் கூட்டமதில்
நீயும் நிற்பாய் ஓர்நாளில்..
வேம்பு வார்த்தைகளால் பிறரை இழிவுபடுத்தாதே..
துன்பப்பட வைக்காதே..
வையக வாழ்வில் என்ன பயன்
பெற்றாய், மானிடராய் பிறந்து...
துடுப்புக் கொண்டு ஓடும் படகுப்போல்
நல்லெண்ணம் கொண்டு
நடைபயிலும்...
அனைவரையும் நடைபயில
உன்னால் முடிந்த முயற்சி செய்..!

- பிரீத்திகா ஜெகதீஸ்வரன்