இவள் க வில் கண் பட்டு போனதால்
கவிதை எழுதும் மறந்தால் சில காலங்களாக,,,,❣️
தமிழே...! ❣️
உனக்காக மீண்டும் ஒரு உதயம்
இந்த சித்திரை விடியலில்...,❣️
உன் த-வில் தவழ்ந்து
மி-யின் நுனி மீசை பிடித்தே வளர்ந்து
ழாவின் மீது புள்ளியாய் ❣️
ழ்-என்று உயர்ந்து நின்றேன்,
உணர்வுகளுக்கு உயிரூட்டும்
உன்னை கற்றதாலே
ஊரெங்கும் ஒலிக்கிறதே என் குரல்.❣️
-
Praveena Priya
(Priyanathan)
207 Followers · 92 Following
RJ Praveena or Priya🖤🦋
Hello FM 106.4
Pondicherry.
Hello FM 106.4
Pondicherry.
Joined 7 May 2021
14 APR 2023 AT 9:34
23 FEB 2023 AT 18:50
உன் மூச்சுக்காற்று
என்னுள் நுழைந்ததும்
சாணத்தின் நடுவே
பூசணிப்பூவாய்
பூரிக்கிறேன்.
-இப்படிக்கு ,
புல்லாங்குழல்...🖤-
26 JAN 2023 AT 16:05
காதல் விளையாட்டில்
கைதேர்ந்தவள் அல்ல,
'கா ' என்ற முதல் எழுத்தாய்
கடந்தகால காவியம் என்று
ஏதுமில்லை ,
'த 'என்ற இடை எழுத்தாய்
அதில் சிக்கி தவித்ததுமில்லை ,
'ல்' என்ற ஒற்றெழுத்தாய்
ஒருசேர ஒருவரோடும்
நடந்ததுமில்லை ,
முதலும் நீ ❤
முடிவும் நீ❤-
23 DEC 2022 AT 18:55
உன்
விரல்
சேர்ந்திட
விருதம்
கொண்டேன்
என்றாய்...ஆனால்
என்
விருப்பம்
கேட்டாயா
மோதிரமே..?-
27 NOV 2022 AT 14:55
கொட்டாத மழைக்கு
குடைக்கொண்டு சென்றேன்
முட்டும் வெயிலின் மீது
கோபம் கொண்ட மொட்டாகி..!-
13 NOV 2022 AT 15:28
கண்ணீரை
காதலிக்க
கற்றவனே
வாழ்க்கையை
கையாளத்
தெரிந்தவன்
ஆகின்றான்.-
10 NOV 2022 AT 19:25
பட்டபகலில்
பைத்தியகாரி
தலைவிரித்தபடி ,
பூ .....🌺
அதுவும்
பூவை .....🦋
அவளும்.-