நினைவில் இருப்பது கனவில் மலர்கிறது
கனவில் மலர்வதால் காதல் துளிர்கிறது
காதல் துளிர்வதால் தேடல் தொடர்கிறது
தேடல் தொடர்கதை ஆனதால் என்னவோ!
தினமும் எந்தன் விழிகள் கண்ணீர் மொழியில் உரையாடுகிறது
கண்ணாடியின் முன்பு....💌
-
மின்மினியாகவே வாழ்ந்து விடுகிறேன... read more
நிழலின் தனிமை சிறை { 13 }
நிலவென நினைவுகள் உலவுதே கனவினில் காதலை கூறிட மொழி இல்லையே....💞
மறைமுகமாக ரசிக்கிறேன் பெண்மையை
மலர்ந்திட மட்டும் மறந்தது ஏனோ மலர்விழியே.... ✨
விழிகளில் வாழ்ந்திடும் நிழல் மதியே
கனவினில் நினைவுகள் கண்ணீர் நதியென வாழ்வது ஏனடி! நீயும் கூறடி வெண்மதியே !....🦋-
நிழலின் தனிமை சிறை { 12 }
யாரை மறக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ
அவர்கள் தான் நினைவுகளாக கனவுகள் வரை மலர்வார்கள்.... 💯
மறக்க வேண்டும் என்று எண்ணுவதை விட
அவர்களின் நினைத்துக் கொண்டு கடந்து செல்வது எவ்வளவோ மேல்... 🦋
தனிமைக்கு துணையாக யாரோ ஒருவரின் நினைவுகள் அசைபோட்டுக் கொண்டுதான் இருக்கிறது
காதல் கொண்ட ஒவ்வொருவரின் மனதிலும்... ❤️🔥
காலத்தை விட மிகப்பெரிய விசித்திரமான ஒன்று இவ்வுலகில் இல்லை
அதனால் முடிந்தவரை கடந்து செல்லுங்கள்
காதலை மறந்தவர்களை நினைத்துக் கொண்டு
அவர்களுடன் வாழ்ந்த ஏதோ ஒரு நினைவுகள் நம் முகத்தில் புன்னகையை தரும்...... 💌-
நிழல் மதியே { 7 }
நீ வருகிறாய்
என் நினைவுகளாக மாறுகிறாய்....💞
கனவினிலும் தொடர்கிறாய்
கண் விழித்தால் கண்ணீராகவும் வாழ்கிறாய்....💯
உறவாகவே எண்ணுகிறேன்
என் உணர்வுகளை நீ சிதைத்த போதும்.....🥀
உள்ளத்திலே உயிர் வாழ வேண்டுமா...? என்ற போராட்டம் தொடர்கதையானது
உடனிருந்து பாதுகாக்க நீ என் அருகினில் இல்லையே என்பதனை நினைத்து....💔
இனி என் அருகினில் இருந்தாலும் என்ன பயன்
நீதான் என்னவள் இல்லையே....❤🩹
மலர்கள் தன் வாசத்தை தூதாக காற்றிடத்தில் அனுப்பி வண்ணத்துப்பூச்சிகளிடம் தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறதோ...🌻🦋🌻
அவ்வாறே நானும் உன்னை காண தினந்தோறும் காத்திருக்கிறேன்
ஆனால் தூதாக அனுப்ப நீ ஒன்றும் என்னவன் இல்லை என்று கூறுவது நியாயமில்லையே மலர்முகிழே 🌷
உன்னை காண ஒவ்வொரு முறையும் பல காரணங்களை தேடி அலையும் என் மனதிற்கு
"அவள் என்றும் மன்னவள்தான் ஆனால் மன்னவன் நீ இல்லை என்ற ஒற்றைக் கூற்றினை எடுத்துரைக்க முடியாமல்...."
என்னிடம் நானே தோற்ற நொடிகளை மீண்டும் மீண்டும் எண்ணி அவள் மீது காதலானது கவிதைகளின் வழியே மலர்கிறது என்பதனை எவ்வாறு அவளிடத்தில் எடுத்து கூறுவது.....🦋💌🦋
கவிதையினை கூறினாலும் யாருக்காக எழுதுகிறாய் என்று என்னிடமே வினவுகிறாள்....
உனக்காக தான் என்று கூறிட ஆசை தான் எனக்கும்....
ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள்
""நீ என்னை மறந்து விடு என்று இல்லாமல் இருக்க வேண்டுமே...... 💌""-
நிழல் மதியே { 6 }
என்னுடைய ஆசைகள்
சோகம் மறக்க அருவியின் அருகில் அமர்ந்து அதன் அழகினை ரசிக்க வேண்டும்
சொந்தம் என்று என்னை தேடி வர வனத்திலே பூத்த பூக்களின் வாசமும் என்னை நாடி வரவேண்டும் ....
ஏக்கங்கள் என்று என்னிடம் பெரிதாய் எதுவும் இல்லை அவளைத் தவிர
அதனால் தேய்பிறை இல்லாத முழுமதியினை
என் விழியோடு வாழ அவள் நினைவுகள் கனவினில் வந்தால் போதும்
காலை நேரம் கண்ணீர் துளிகளாக பூக்கும் என் காதல்....💞
மீண்டும் அவளை காண வேண்டும் என்ற எந்தன் எண்ணத்தை மாற்றியமைக்க வண்ணத்துப்பூச்சிகள் தினந்தோறும் என் கன்னத்தின் மீது முத்தங்கள் தந்தால் போதும்....🦋
கொட்டும் மழையினில் குடை பிடிக்க மர கிளைகள் போதும்
மெட்டெடுத்து பாடிட வண்டின் ரிங்காரம் போதும்
இரவு வந்ததும் என் விழிகளை இருள் சூழாமல் பாதுகாக்க மின்மினியும் தன் உறவினரோடு நான் வசிக்கும் இடத்திற்கு வர வேண்டும்
அதன் அழகினை பகல் வரும்வரை இரவு முழுவதும் ரசித்திட வேண்டும்💌
பிரிவென்பது நம் இருவருக்கும் மட்டுமே தவிர
நமக்குள் பூத்த காதலுக்கு அல்ல...
அவை கடைசி வரை நினைவுகளாக வாழும் நித்திரையின் சித்திரமாக...💞Ñ💌-
நிழல் மதியே { 5 }
உணவென்று உன் நினைவுகளை உட்கொள்ளும் என் கனவிற்கு
உறவானது என்னவோ காலை நேர கண்ணீர் துளிகளே...💌💯💌
என் துயரத்தை அறிந்த பின்பும் துணையாக நீ இல்லை
பின்பு ஏன் கவலையில் வாழ வேண்டும் 🥀
கடந்து செல்கிறேன் உன் நினைவுகளோடு
முடிந்தால் கல்லறையில் வந்து பார் என் நினைவுகளோடு....💯
கண்ணாடியாக வாழுந்தது என் உள்ளத்தில் பூத்த உந்தன் பிம்பங்கள்
உடை தெரிந்துவிட்டாய்
அதனுள் வாழ்ந்த என் காதலையும் அது பல நூறு சில்லுகளாய் ஆனது உன் நினைவுகளைப் போல் பிரிவுக்கு பின்பு...🥀🦋🥀
இனி என் காதல் ரகசியமானது உந்தன் மீது
அதனை உணர்ந்து கொள்ள வேண்டும் எனில் தினந்தோறும் என் கனவில் வந்து வாழ வேண்டும் நீ.....✨-
நிழல் மதியே { 4 }
நினைவில் சிறு பிழை தான் என் காதல் நீ இல்லை
கனவில் தினம் வளர்பிறை தான் நிலவாய் நீயும் எனக்குள் உலவிடும் நொடிகளில் பகலை மறந்தேன் பனி மலரே.....✨
-PriÑcess sangamithra💌-
நிழல் மதியே { 3 }
( ✨.....juÑe 1....✨ )
இதழ்கள் பேசிட இமைகள் வெட்கத்தில் மொட்டென மாறியது...
இமைகள் மலர்ந்திட இதழ்கள் வெட்கத்தில் பிரிந்தது...🦋
முதல் காதல் முத்தத்தை மோகம் இன்றி தந்தேன் கன்னத்தின் மீது
மறுநாள் காதலோடு பூத்தது இதழ்கள் மீது....💞-
கடல் அலைகள் தீண்டும்போது
உன் நினைவுகள் மலர்வதை கண்டேன்
கரையோடு ஓடும் நண்டாய்
உன் நிழலினை தீண்ட வந்தேன்
நெடுங்காலம் பிரிந்த பெண்மை நிகழ்காலத்தில் சேர்வதை கண்டேன்
கனவென்று தெரிந்த பின்பு
கனத்த மௌனம் போல யாருடனும் பேச முடியாமல் வாய்விட்டு அழுதிட நினைத்தேன்-
என்னை மறந்து வெகு நாட்கள் ஆனது என்கிறாள்
இருப்பினும் என் மீது கொண்ட அன்பினை வெளிப்படுத்தும் இதழ்கள் மௌனமாக இருந்தாலும் விழிகள் அம்மௌனத்தை கலைக்கிறது..... ✨-