Prabhu Kondarangi   (பிரபு கொண்டரங்கி)
0 Followers · 2 Following

Joined 13 November 2019


Joined 13 November 2019
21 JUN 2024 AT 19:23

மதியொப்ப தேய்ந்து வளருமே வாழ்வும்
அஃதறிந்து வாழ்தல் அழகு.

-


1 JUN 2024 AT 19:06

எண்ணுக நல்லவை எண்ணிய செய்யுக
எண்ணிய வண்ணம் அரிது.

-


11 MAY 2024 AT 18:11

வினாவும் விடையுமாய் என்றென்றும் கிட்டும்
வினைக்குச் செயலென்றும் வித்து.

-


13 MAR 2024 AT 23:44

ஒன்றைவிட மற்றொன்று நன்றெனினும் மாறாது
ஒன்றினைப் பற்றல் ஒழுக்கு.

-


26 NOV 2023 AT 12:23

காரிருள் நீங்கிட நல்லொளி ஓங்கவே
கார்த்திகை தீபமேற்றிக் காண்.

-


22 NOV 2023 AT 10:13

சூரன்மேல் ஆறுமுகன் வீரவேல் எய்யவே
ஆனான் மயில்சேவல் ஆய்.

-


8 NOV 2023 AT 19:29

முன்தொழுவோம் பிள்ளையாரை கைகூடும் என்பது
முன்னோர்கள் நம்பிக்கை யாம்.

-


5 NOV 2023 AT 12:21

திருஞான சம்பந்தர் சுந்தரர்நா வுக்கரசர்
மாணிக்க வாசகர்நால் வர்.

-


5 NOV 2023 AT 11:47

நல்லவர் கெட்டவர் என்பவர் இல்லையேசூழ்
காலமே காரணம் காண்.

-


30 OCT 2023 AT 17:41

மறுசாரம் கேளா தொருசாரம் பேசல்
நடுநிலை அற்ற செயல்.

-


Fetching Prabhu Kondarangi Quotes