Prabhu   (✍️தன்வி)
267 Followers · 40 Following

Be the best version of you🍁
Joined 27 August 2019


Be the best version of you🍁
Joined 27 August 2019
12 APR AT 23:06

இரவிடம் பேசிடவே
ஆசை தான்

இடையூறு
இழைக்க
ஆர்வமில்லை.

இரவு
பிடிக்குமென
அன்று
நீ சொன்னது!

இன்றும்
நினைவில்!

-


10 APR AT 21:48

உடன் பிறவாமல்..
உதித்த உறவால்..
உன்னத உள்ளத்தில்..
உற்சாக மலைச்சாரல்..

-


4 APR AT 22:56

திக்குத்தெரியாமல்
அலைந்திடும்
மனம் போலே
வண்ண பலூன்கள்
நீ கைவிட்டதும்

-


3 APR AT 17:05

நினைப்பதை
நிறுத்தயியலா
நன்கறிந்ததே
நாளும் பொழுதும்
நானில்லை
நலம் நல்கிடு
நல்காட்சி அளித்திடு..

-


2 APR AT 23:00

நீ
சேகரித்த
சொற்களை
படித்ததும்
கடந்துவிட
எத்தனித்தது
நான் மட்டுமே

-


7 MAR AT 21:28

கடந்ததை
நிகழ்வில்
எதிர்நோக்க
உன்னில்❤️
சரணடைந்தேன்

-


23 FEB AT 12:32

அவசரகால
பாதுகாப்பு
கவசமாக
இந்த
சன்கிளஸ்😎

எப்படியும்
தீவிர தாக்குதலை
நிறுத்தப்போவதில்லை
😡உன் கண்கள்😡

-


15 FEB AT 18:09

காதல்
----------
மூன்று எழுத்தில்
மூன்று எண்ணில்
முழுமையாகாமல்
முக்காலமறிந்து
முழுமதியாக ஒளிர்வது✨

-


11 FEB AT 20:09

செலவிடும்
நேரம்
குறைவாக

மனதை
சீராக்கும்
நிறைவாக

உடனடி
புத்துணர்வின்
திடலாக

புதுமுகங்கள்
மலரும்
நட்பாக..

-


5 FEB AT 18:46

மெளனம்
---------------

ஒரு சொல்
மட்டுமல்ல
வலி

ஒரு சொல்
மட்டுமல்ல
யுத்தம்

ஒரு சொல்
மட்டுமல்ல
உணர்தல்

ஒருசொல்
மட்டுமல்ல
தியானம்

ஒருசொல்
மட்டுமல்ல
தேடல்

-


Fetching Prabhu Quotes