அடிமைக்கு
அடிமையாகும்
சூழ்நிலை தான்
உலகிலேயே
தாழ்ந்த நிலை..!-
எரிக்கப்படும்
உடல்களுக்கு
சாதிவாரி
சுடுகாட்டில்
கல்லறையை
ஆக்கிரமிக்கும்
உரிமை
பறிக்கப்படுகிறது..!-
கருமை
நிறத்திற்காக
வெறுக்கப்படும்
காக்கைக்கு
உணவளிக்க
உதவியது
முன்னோர்கள்
ரூபத்திலான
மூடநம்பிக்கை தான்..!-
பொய்யை
பலமுறை
அழுத்திச்
சொன்னால்
உண்மையாக
மாறிவிடாது..!
உண்மையின்
வலிமையை
அதிகரிக்கும்..!-
வேறுபாடுகளை
நீக்குவதற்காக
கொடுக்கப்பட்ட
இட ஒதுக்கீட்டில்
வென்றவன்
உயர்ந்தவனாக
ஆகிவிடுகிறான்..!
அவனுக்கு
அடுத்த வேலை
என்ன.?
தாழ்ந்தவனை
ஒதுக்குவது தான்..!
-
வாழ்க்கை
என்பது
வேர்க்கடலையை
சுவைப்பது
போன்றதல்ல..!
விதைத்து
வளர்த்து
பக்குவமாய்
அறுவடை
செய்வதைப் போன்றது..!
-
யானைக்கு
அடி
சறுக்கியதை
பார்த்திருக்கிறாயா..?
பக்கத்தில்
இருக்கிறவனின்
குணம்
சறுக்குவதைவிட
அது பெரிய
சறுக்கலல்ல..!
-
உங்களின்
போர் முரசுச்
சப்தம் கூட
நான்
தியானத்தில்
இருக்கும்போது
குறுக்கிடும்
பறவையின்
கூக்குரல்
போலத்தான்
கேட்கிறது..!-