Poorna Gomathi   (RPG)
244 Followers · 21 Following

read more
Joined 26 November 2016


read more
Joined 26 November 2016
29 JAN 2022 AT 9:17

எழுதி ரொம்ப நாளாச்சு
எழுத்துகளும் என்ன மறந்து போச்சு
என்னத்த எழுத? சரி
எண்ணத்த தான் எழுதனும்
என் மனதின் இந்த நொடி உருமாற்றம் -

கையில் அடங்கா குழப்பம்
கால நிலை மாற்றம்
கண்ணுக்கு தெரியாத நோய்
கேட்பதெல்லாம் புலம்பல்
கடந்த கால நினைவின் ஏக்கம்
கொரோனா ஏற்படுத்திய தாக்கம்
காரணம் நூறு கவலை கொள்ள
காப்பது நம்பிக்கை ஒன்று தான்
நம்மால் ஆனால் அன்பால் சரி செய்வோம்
Let's spread positivity ❤️ more than COVID! — % &

-


13 AUG 2021 AT 8:20

விழியோரம் அழகிலே
சிலையாகி உரைகிறேன்
இதழ் ஓர சிரிப்பிலே
இமைமூடி தொலைகிறேன்

நெஞ்சோரம் மழையிலே
குடையாகி நனைகிறேன்
நிழலோரம் நடந்திட
நெடுந்தூரம் கேட்கிறேன்

நீயில்லா நேரம்
நீர்குமிளாய்  உடைகிறேன்
கரு விழி ஈரமும் கடலாகுதே!

அவள்  முகம் பார்க்கவே
கண்ணாடி ஆகிறேன்
கண்ணாடி ஓரமாய்
கண்ஜாடை காட்டடி...
Contnd in caption...




-


25 MAY 2021 AT 12:06

கடலோர அலையிலே
கால் சுவடோடு அலைகிறேன்

நீர் காற்றின் அசைவிலே
நெடுந்தூரம் மிதக்கிறேன்

முடிவில்லா வானத்தை
அளக்கத்தான் முயல்கிறேன்

நிலையில்லா வாழ்க்கையை
நிம்மதியாய் களிக்கிறேன்

நிலையும் இல்லா நிகழ்வும் கோர்க்க
நிதமும் நிறைவாய் நினைவுகள் சேர்க்க
நிகரில்லா நிலை காண்கிறேன் .....

காற்றின் ரோமம் காதில் வருட
காலம் செல்லட்டும்

கால்கள் இரண்டும் தரையை விட்டு
கடந்து போகட்டும்

மழலை மொழியாய் மழையும் பொழிய
மண்ணில் தவழ மனதும் துடிக்க
மாறாத நிலை கேட்கிறேன்....

-


10 FEB 2021 AT 21:05

ஆடும் அருவி பாடு தழுவி
அழகிலே நனைகிறேன்

அசைந்தும் அசையா வளைவில் ஓடும்
அதிசயதில் உரைகிறேன்

பார்க்க பார்க்க பாதி மோட்சம்
பாறைகள் பாக்கியம் செய்ததா

நதியில் விழுந்து நீரில் நனைய
நிலவின் பிம்பம் கரையுமோ

விழியில் பாதி நனைந்து போக
வழியில் கரையை கடக்குமா

விருப்பம் மொத்தம் விரைந்து வந்து 
விரலை நனைக்க விரும்புதா

-


13 SEP 2020 AT 13:02

Nowadays I like straightforward people a lot
And so happy being straightforward as well
No more act of pleasing people
Let them know what you really feel
Also prepare your mind for the same
Both makes life more easier!

-


16 JUL 2020 AT 9:34

Heart speaks when night falls!

இரவுக்கு பொய் சொல்ல தெரியாது, விடியலின் விதிகள்
இரவில் விழித்திருக்கும் விழிகளுக்கு கிடையாது

உணர்வுகளின் வேறுபாடு உதயம் வந்தபின் ஏனோ
இந்த உணர்வும் எனக்கு மட்டும்தானோ

கலப்படம் இல்லா இரவு அதில்
காணப்படும் கனவு கலைந்திடுவது விடிவதாலோ

நான் என்பது இரவில் மட்டும்தான்
பகலில் தெரியும் பிம்பதின் பொய் அசைவுகளும்
வெளிச்சம் இருக்கும் வரை மட்டும்தான்

மாசில்லா (பிறர் குரல் சேராத) காற்றின் மர்மத்தால், என்
மனதிடம் பேச இரவு வரை காத்திருக்க வேண்டியது
மதிப்பிட மற்றவர் இல்லை என்பதாலோ

கிறுகல்களும் கவிதையாய் காட்டும் இரவு, விடிந்ததும்
உயிரிலா எழுத்துக்களாக தோன்றுவது
உண்மையில் உள்ளம் பகலில் உறங்குவதாலோ

மூளையும் மூலையில் தூங்குவதால்
அன்பின் அரவணைப்பு மட்டும்தான் அந்த அமைதியில்
அறிவின் ஆதிக்கம் அதிகாலையில் தொடங்குவதால்
காண்பதில், கேட்பதில், சொல்வதில் கலப்படம்!

❤️ Speaks when night falls

-


13 JUL 2020 AT 16:56

கஞ்ச சிரிப்புடன் அவன் கண்களை காணும் அந்த உணர்வு கொஞ்சு(ச)ம் கவிதை!

-


30 JUN 2020 AT 15:28

Understanding, love, trust, friendship
Betrayal, loyalty, principles
Anxiety, disappointment
All in one place
Where I question my existence!

புரிதல், பாசம், நட்பு, காதல், இன்பம்
துரோகம், ஒழுக்கம், பண்பு
ஏக்கம், இழப்பு
இவைகளுக்கு நடுவில்
இன்னதென்று அறியாத நிலையில்!

-


18 APR 2020 AT 22:05

எப்போது திரும்பும் இயல்பு நிலை?

சனி, ஞாயிறு விடுமுறை தேடிய நாட்கள்
வீட்டில் இருக்கும் இந்நாட்களை பார்த்து கேட்கிறது
எப்போது திரும்பும் இயல்பு நிலை?

போக்குவரத்து நெரிசல் போதும் என்ற நாட்கள் - வீதியில்
சிவப்பு பச்சை ஆக கூட காத்திராத மனங்களை பார்த்து கேட்கிறது
எப்போது திரும்பும் இயல்பு நிலை?

ஆறிப்போன உணவு சுமந்து அலுத்துப்போன நாட்கள்
சூடும் சுவையும் கூடவே மாறிப்போன மனதை பார்த்து கேட்கிறது
எப்போது திரும்பும் இயல்பு நிலை?

உட்கார நேரமில்லாமல் சுழன்ற நாட்கள்
உள்ளே அடைந்து கிடக்கும் கால்களை பார்த்து கேட்கிறது
எப்போது திரும்பும் இயல்பு நிலை?

ஆடம்பரத்தை விரும்பி அமைதி இழந்த நாட்கள்
அத்தியாவசியத்தை தேடும் நாட்களை பார்த்து கேட்கிறது
எப்போது திரும்பும் இயல்பு நிலை?

இயல்பு நிலையில் இழந்தவைகளை உணர
அந்த இயல்பு நிலையை இழந்தோம்
எப்போது திரும்பும் இயல்பு நிலை?

- எப்போதும் மாற்றத்தை எதிர்பார்க்கும் மனம்

-


25 JAN 2020 AT 18:37

ஆரஞ்சு மிட்டாய் அழகாய் கரைகிறது அலைகளுக்கு நடுவே

-


Fetching Poorna Gomathi Quotes