பேனா நண்பன்   (பேனாநண்பன் @paena_nanban)
21 Followers · 87 Following

Follow me on Instagram @paena_nanban
Joined 6 April 2020


Follow me on Instagram @paena_nanban
Joined 6 April 2020

எல்லா உணர்வுகளும்
இயைந்தது தான் இயல்பு என்றால்...
கோபமும் கண்ணீரும் மட்டும் ஏன் இயல்பிலிருந்து விலகியே நிற்கிறது?...

-



அவளுக்காக நான் எதையும் இழக்க தயாராக இருக்கிறேன்...
அவள் உட்பட ...
ஏனெனில் அவளின் சந்தோசம் நானாக இல்லா விட்டால் ?

-



அவள் என்னை அப்படியே துண்டித்து விட்டாள்...
சரி தான்...
இதுவும் என் திட்டத்தில் ஒன்று தான்...
இறந்த மரத்திற்கு எதற்கு சூரிய வெளிச்சம்?

-



நிலத்தில் அலையாக தேடுகிறேன்...
நீரில் இலையாக மூழ்கிறேன்...
இரவில் நிழலாக நீள்கிறேன்...
பகலில் கனவாக தொடர்கிறேன்...
உறவில் ஒன்றாக வேண்டுகிறேன்...
உறக்கத்தில் உன்னோடு தான் வாழ்கிறேன்...
நிஜத்தில் வெகு நாளாக !
"உன்னை நான் நேசிக்கிறேன்"

-



கவிதைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கயிற்றில் தொடுக்கப்படும்,
அடுக்கு மொழி இல்லாத
எதார்த்ததின் குவியல்கள்
எனது வாழ்க்கை...

-



நித்தம் ஏக்கத்துடன்
ஜன்னல்கள் இடுக்கில்
காத்திருக்கும் காற்றுக்கு,
ஒரு யாசகன் முகம் வேண்டியிருக்கிறது....

-



இதழோரம் தீண்டி ...
இளம் சூட்டில் அணைத்து ...
இலகுவாக ஒன்றினணந்திடும் ...
ஒரு குவளை தேநீர்...
அடிமையாக்கிடும் ஒருவித ஆன்மீகம் தான்...

-



சரியாக இருந்து சலித்து விட்டது...
தவறுகள் செய்ய காதலிக்க வேண்டும்...
திருத்திக் கொள்ள காதலி வேண்டும்...
இதற்கு எல்லாம் சற்று காத்திருக்க தான் வேண்டும்...

-



என் கதைக்கு முன்னுரை, முடிவுரை;
அவன் எழுதிவிட்டான்...
முயற்சியுரையை என் கையில் விட்டுவிட்டான்...

-


20 NOV 2024 AT 23:31

நான் இமைக்கும் நொடியெல்லாம்,
உன்னை நினைக்க மறந்ததில்லை...
உன்னை நினைக்கும் நொடியெல்லாம்,
நான் புன்னகைக்க மறுத்ததில்லை...
நான் புன்னகைக்கும் நொடியெல்லாம்,
என் எதிரில் நீ இருப்பதில்லை...
என் எதிரில் நீ இருக்கும் நொடியெல்லாம்,
நான் இமைக்க நினைத்ததே இல்லை!

-


Fetching பேனா நண்பன் Quotes