Pavithra Sundaram   (Pavi💜)
931 Followers · 151 Following

Joined 6 March 2019


Joined 6 March 2019
11 OCT AT 10:49

அழ வைத்தவர்கள்
அறிய வாய்ப்பில்லை..
நான் அடைக்கலமாயிருப்பது
ஆதியும் அந்தமும்
அற்ற அவனிடத்தில் என்று..
அழிவென்பதென்ன..
என்பதை மட்டும் நீங்கள்
அறியப் போவதில்லை..
அணு அணுவாய்
ஏற்படும் அழிவு
எவ்வளவு அகோரமாய்
இருக்கும் என்பதற்கு
அத்தாட்சியாய்
அமையப் போகிறீர்கள்..
வாழ்த்துக்கள் 💐

-


6 OCT AT 23:31

கண் கொண்ட
கடல் நீரனைத்தும்,
கரைந்த பின்
கரை கண்ட நெஞ்சம்
மொழிந்தது என்னிடம்...
"வலிகளுக்கு வலி தர
பிறந்தவளே
வலிமையோடெழுந்து வா...
கையோடு ஒட்டியிருந்த
கசடுகளையெல்லாம்
உதறி விட்டு வரும் உன்னை
உயர்த்தி தோளில்
தூக்கி வைத்துக்கொள்ளும்
உனக்கான நாளோ
வெகு நாளாய் உறங்காமல்
உள்ளது..
உன் வரவை எண்ணி "
என்று....

-


9 NOV 2024 AT 14:00

உன் ஐவிரல்களுக்குள்
அடைக்கலமாகி விட்ட
என் ஏதோவொரு விரலை
ஏக்கமாய் பார்க்கின்றன
என் ஏனைய
விரல்களனைத்தும்...

-


8 NOV 2024 AT 14:26

சின்னச்சிறு உலகில்
செயற்கையாய்
பெரிதாக்கி கொள்கிறோம்..
நமக்கு மட்டுமே
இத்தனை அல்லல்கள்
என்று...
பெரிதினும் பெரிது
யோசித்து,
சிறிதினும் சிறிதாக்கி
சிரித்து வாழ்ந்து விடுவோம்..
இந்த சில்லறை
சிரமங்களை யெல்லாம் 💫

-


12 JAN 2024 AT 14:13

அழுது கொண்டேனும்,
பிதற்றிக் கொண்டேனும்,
திட்டிக் கொண்டேனும்,
உளறிக் கொண்டேனும்,
உன்னைத்தான்
அழைத்துக்
கொண்டிருப்பேன்...
உன்னையன்றி வேறு யாரையும்
அழைக்க,
நீ தான்
எனக்கு யாரையுமே
உரிமையாய்
வைத்திருக்கவில்லையே /

-


12 JAN 2024 AT 14:03

நிதமும்
அனுதினமும்
நித்தம் நித்தம்
உள்ளுறையும் ஆன்மா
மடிவதென்வது
இப்பயணத்தில்
வாடிக்கையாகிப்
போன பின்னரும் கூட,
எப்படியாவது
மூச்சை பிடித்துக் கொண்டு
முழித்துப் பார்க்கத்தான்
வேண்டியுள்ளது..
கடந்து கொண்டிருப்பது
பிறவி என்னும்
பெருங்கடல் அல்லவா?

-


23 AUG 2023 AT 19:10

மயில்சாமி
தொடங்கி வைக்க
சிவன் வந்து
சிறக்க வைக்க
வீரமுத்துவேல் வந்து
கிடைக்க வைத்தார்..
வெற்றியெனும் பரிசை
வெண்ணிலவில்..

-


6 APR 2023 AT 11:32

பெறுகின்ற அன்பெல்லாம் பொய்யென
தெளிந்திடு!
தருகின்ற அன்பெல்லாம் மெய்யென
பேணிடு!
மெழுகிட்ட பச்சையத்தின்
மேல் நிற்கும் துளி நீர் போல்,
மெய்யான சிவம் கண்டு,
பொய் விலக்கி வாழ்தலே
உலகில் உயர்ந்த
உன்மத்தம் 🙏

-


1 FEB 2023 AT 19:09

என்றோ ஒரு நாள்
என் இதயத்தை திருடிய
பாடலின் பல்லவிதான்
இன்றென் இதயத்தில் இருந்து
தொலைந்து போன
அமைதியை அமைதியாக
திருப்பி தந்தது..

-


22 JAN 2023 AT 21:25

Displayed in social media by all.

-


Fetching Pavithra Sundaram Quotes