நான் என்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது
நீ வரும்போது தான் நட்சத்திரம் நகர்கிறது ...
-
பிரிவின் ஏக்கத்தில்
விம்மி விம்மி சோர்ந்து உறங்கும்
குழந்தை போலானது
உன் நெருக்கம் அகலும்
என் இரவுகளின் உறக்கம்...
-
அனைத்து விடும் போல் இருக்கிறது
நேற்றிரவு நாம் தான் அவைகளுக்கு ஒளி ஊட்டிக்கொண்டு இருந்தோம்
இன்று நீ இல்லை
நான் மட்டும் எரிந்து கொண்டுயிருக்கிறேன்...🔥❤️🔥💗-
இருவருக்கும் வேவ்வேற
நியாயம்
பழி தீர்க்கும்
ஆயுதம் மட்டும் ஒன்று
துயரம் என்னவென்றால்
மடிந்து கிடப்பது நாம்...
-
இனிமேலும் அப்படி நடக்க கூடாது
இப்போதே நேசித்து விடு
இப்போதே கொண்டாடி தீர்த்து விடு
இன்பமாய் அனுபவித்து விடு
இழந்த ஒன்று சிறந்ததாகா
இருந்துவிட்டு போகட்டும்
இறந்த காலத்திலையே அழுகி
விடதே
நிகழ்ந்து கொண்டிருப்பதே மலர்ச்சி
முடிவு இல்லாவிட்டால் உணர்வுக்கு மதிப்பேது
ஒன்றை விட ஒன்று சிறந்தது
ஒன்றுதான் சிறந்தது!!!
தேர்ந்தெடுத்த ஒன்றே மகிழ்ச்சி
பிடித்த ஒன்றே இனிமை
நேசிக்கும் ஒன்றே இன்பம்
எண்ணிக்கையை எண்ணாதே
வளமைப்படுத்து செழித்தொழுங்க செய்
அதுவே எதிர்காலம் ...
-
தசாப்தம் கடந்தும் அந்த முகத்தின் ஒளி குறையவே இல்லை!!!
திவ்வியமான முகம்
அவளுக்கு பெயரும் அதுவே
இதோ இன்று அதே சாலையில்
அவள் கடந்து செல்கிறாள்
மாலை சூரியன் பிரகசிக்கிறது
பள்ளி சிறுவனாய்
என்னவென்றே புரியாமல் இருந்த உணர்வுக்குள் மீண்டும் மறைகிறேன்...-
எத்தனை முறை பட்டாலும்
திருந்தாத மனம்
சிறு நூல் அளவு வித்தியாச முட்டாள்தனத்தை அறியாமல்
நம்பி தோற்க்கிறது
என்ன செய்வது கொஞ்ச நஞ்ச வாழ்க்கைம்
அதுதான் நகர்த்த வேண்டி இருக்கிறது
தொட முடியாவிட்டலும் நிலவு
நமக்கு அருகில் இருப்பதாகவே
என்னிக் கொள்வோம்...
-
மௌனம் பெரும் இடியாய்
நொறுக்கி விட்டு போகிறது
நினைவை கிளரி அதுவாகவே
கோலுத்தி எறிக்கிறது
அவ்வளவு தான் இந்த
மனதின் வலிமை...
-
தேனும் வாசமும்
என் வேரின் ஆன்மா
நீங்கள் என்னுடைய
மலர் அல்லது கனி அவ்வளவு தான்...-