மௌனத்தின் மொழி...!
நீண்ட உரையாடலின் பின்,
உன் அமைதியான மூச்சுக் காற்று என் இதயத்தைத் தழுவியது,
சொல்லிக் கேட்க நினைத்த வார்த்தைகளுக்கு பதிலாக,
உன் நிம்மதியான உறக்கமே நம் காதலின் சாட்சியானது தோழி.
-
ஆண் காதல்..!
சிறு சிறு கொஞ்சலாக தொடங்கி
பல கெஞ்சலின் பின் விடை பெறுகிறது
உன் அனுமதி வாங்கி..!-
உறவொன்று உறவானது
வெயிலா? மழையா? இது வானவில்லா?
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா?-
ஜன்னல் ஓர பயணம்...!
கொஞ்சிடும் மழலையர்
அவர்களை அள்ளி கொஞ்சிடும் அன்னையர்..!
தந்தை மடி தவழும் மகள்
தாய் கண்ணம் கிள்ளிடும் மகன்
இசைக்கும் இசைஞானி
இரவின் மடியில் இதை ரசித்திடும் இவன்
யாரும் இல்லை எனும் தாகம் நீங்கி இயற்கை இவன் தாயானாள்..!-
இதயத்தின் இருட்டில்
உன் பெயர் ஒலிக்கும் ஒவ்வொரு நொடிக்கும்,
மூச்சு நின்றுபோவது போல உணர்கிறேன்.-
உனக்கும் எனக்கும் இடையே...!
நம்மை பிரிக்கும் ஒரு அமைதியான தூரம்...!
கண்களில் சொல்லாத கண்ணீரின் கதைகள்,
இதயத்தில் முடிவில்லா வலி.
சிரிப்பில் மறைந்த சோகத்தின் நிழல்கள்,
சொல்ல வராமல் விழுங்கும் வார்த்தைகள்.
நினைவுகள் மட்டும் அருகில் வந்து,
ஒவ்வொரு இரவும் மனதை சிரிக்கவும் சிதறடிக்கவும் செய்கின்றன.
கள்ளி...!
-
மாறாத உன் வாசத்தின் நினைவால்,
நேரம் நகர்ந்தாலும் இதயம் அப்படியே நின்றது.-
மின்னாத இரவின் அமைதியில்,
மறைந்துவிட்ட உன் நிழல்கள் மட்டும்,
மனதில் சுழலும் அலைகளாய்.
சிரிப்பின் இசை தொலைந்து,
மௌனமே மீண்டும் மீந்தது…!-
நிறைந்த உன் நீண்ட புன்னகை, மழையில் நனைந்த அந்த மௌன முத்தம், உன் வாயின் ஓவியங்கள் பதிந்த என் தோள் பட்டை.
அந்த நொடிகள், இப்போது நினைவில் நிரம்பி ஆழச் சுவாசிக்கின்றன.-
உன் உதட்டில் என் பேரழகை பதிக்காமல் விட்ட பாவம், அந்த ஒளியிலே நானும் நீயும் உருகிய நேரம், காதலா? காமமா? தெரியாமலே விட்டுவிட்டேன்.
ஆமடி இது நான் செய்யாத பிழைதான்..!-