செல்ல மகளாய்
அப்பா வாங்கி வரும் பட்டாணிக்குக் காத்திருந்தாள்;
காதல் மனைவியாய்
கணவன் வாங்கி வரும் பதார்த்தத்திற்குக் காத்திருந்தாள்;
அன்புத் தாயாய்
மக்கள் வாங்கி வரும் பட்டணப்-பண்டத்திற்கு காத்திருந்தாள்;
பாசக் கிழவியாய்
பேரன் வாங்கி வரும் மாத்திரை குளிகைகளுக்குக் காத்திருந்தாள்;
ஆசையுள்ள ஆவியாய்-அவள் அலையவில்லை
இவர்களின் பிண்டத்திற்காக;
வீதியைத் தாண்டிய கட்டை பூமியைப் பார்த்ததும்
சொர்க்கம் பூமியிலிருக்க எங்கே செல்வது
சொர்கத்தைத் தேடி! என
இங்கே திரிந்தது சிறகற்ற சிட்டாய்.
-
Not everything that you lose can be
retrieved again
— like an unpenned poem.-
தேயும் நிலவு தேம்புவதில்லை, தேயாதிருக்க
கோடி முறை தேய்ந்தும் தொய்வேதுமின்றி
மீண்டும் மீண்டு வந்ததே முழுநிலவாக.-
என் கொடுங்காதல் சிறைக்குள்ளே
குத்தவைத்திருந்த உன்னைக்
கொடி வெட்டிப் பிரித்தெடுத்தேன்
சுதந்திர மனிதனாய்ப், பிறப்பெடுக்க;
வெட்டிய வலி விட்டு விடவில்லை
இக்கட்டையைச் சுமந்து-நீ
கல்லரை சேர்த்த போதும்;
விடாது பிறப்பெடுத்தேன்
உனை சுமக்கும் அன்னையாயல்ல,
நீ சுமக்கும் பிள்ளையாய்.-
வான்மீது கருமேகம் நடைபோடலாம்
பார் மழை பெய்யத்தான் இருள் சூழலாம்
ஏன் இந்த தூரமென்று நாம் ஏங்கலாம்
ஏங்க வைத்து காதல், நம்மிதழ் சேர்க்கலாம்;
கலங்காமல் கடல் தாண்டி நீ செல்லலாம்,
கண்டங்கள் ஏழிற்கும்;
ஒன்றே வானம், ஒன்றே பூமி
வாரச் சென்றே, வாயென்னவனே.
-
கவிதை என்றோர் தனிமொழி
பேசத் தெரிந்த செம்மொழி
அறிந்தோர் சிலர்,
வியந்தோர் பலர்,
புரிந்து அலர்ந்தோர் சிலர்,
புலராது ரசித்தோர் பலர்.
-
Music and love are the two most powerful weapons against humans.
They can,
make you with your pieces;
Break you into pieces.
-
பகலெல்லாம் கேலிக்கூத்தாக
இரவெல்லாம் காலித்திரையாக
வானம் இருள இருள,
வாழ்க்கையே இருண்டதாய்
வண்ணப்படம் போட்டது,
நவீன மனித மூளை.-
நிழல் அறியா,
நிழல் தரும் மரங்கள்
கேட்பதரியாது - தனக்கொரு
நிழல்.
-
நிழல் அறியா,
நிழல் தரும் மரங்கள்
கேட்பதரியாது - தனக்கொரு
நிழல்.
-