பார்த்திபன் ஜெகநாதன்   (பார்த்திபன் ஜெகநாதன்)
178 Followers · 90 Following

read more
Joined 18 July 2018


read more
Joined 18 July 2018

சக மனிதர்கள் ஒருபோதும் உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கமாட்டார்கள்...

ஆதலால்

நீங்கள் தனித்துவமிக்கவராய் மாறி விடுங்கள்...

-



ஏதோ ஒரு சூழலில்
எப்படியும் நீ திரும்ப வந்துவிடுவாய் என்றே இந்த உயிரை கையில் பிடித்து வைத்திருக்கிறேன்...

ஆம்

அது பறந்து செல்ல தயாராகி விட்டது...

-



'வலி' கள் அதிகம் சுமக்கிறான் எனில் வலிமை அவனிடம் தடம் பதிக்க தொடங்குகிறது...

என்று அர்த்தம்

-



கந்தலாய் கிழிந்த புத்தகம் எனினும் அதனுள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்...

தந்தையின் வார்த்தைகளும் அதுபோலவே...

-



அலட்சிய வார்த்தைகள்
அரை நாழிக்கொரு பதில்கள்
கடமைக்கான கரிசனம்
காயப்படுத்தும் செயல்கள்
இவையனைத்தும் நிகழ்கிறதெனில்

உங்கள் மீதான காதல் மரணிக்க தொடங்கிவிட்டது
என்று பொருளுணர்க...

-



உதாசினங்கள் உங்களை பாதிப்படைய செய்யவில்லை எனில் அங்கே காதலென்று ஒன்று பெரிதாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதானே அர்த்தம்...

-



இப்போதெல்லாம் நான் மௌனிப்பதை அவள் பெரிதும் விரும்புகிறாள்...

எனக்கு இப்போது

என் மரணம் அவளை பாதிக்குமென்ற ஐயம் துளியுமில்லை...💔

-



இப்போதெல்லாம் நான் மௌனிப்பதை அவள் பெரிதும் விரும்புகிறாள்...

எனக்கு இப்போது

என் மரணம் அவளை பாதிக்குமென்ற ஐயம் துளியுமில்லை...

-



இறுக பற்றிக்கொள்வதில்
எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை...

ஆனால்

அவர்கள் நான் காயம் பட வேண்டுமென்றே ஆடைக்குள் கம்பிமுள் வேலிகளை
கவசமாக அணிந்திருக்கிறார்கள்...

-



வேண்டாமென்று முடிவெடுத்து வெறுத்து ஒதுக்கி விட்டாய்...

தற்பொழுது

என்னோடு சேர்ந்து என்காதலும் நீந்த அறியாத குழந்தையாய் தத்தளிக்கிறது...

-


Fetching பார்த்திபன் ஜெகநாதன் Quotes