பா.சravana க்குமாா்   (நேசத்துடன் பா.ச க்குமார்)
938 Followers · 134 Following

read more
Joined 13 November 2018


read more
Joined 13 November 2018

குறைகளைத் தேடி
ஈரைப் பேனாக்கி
பேனைப்
பெருமாளாக்குகிறாய்
என்னைத்
தவிர்ப்பதற்கென,
என் அன்பே
ஏன் அவ்வளவு
மெனக்கெடுகிறாய்?,
உனக்கான
எனதன்பு நீ
ஆணையிட
கழுவேறிடும்
எவ்வாராய்ச்சியுஞ்
செய்யாமலே!....

-



பரிணாமம் பெற்று
வைரமாகலாம்,

நான் மரித்தபிறகு
என்
இதயத்தைக்
கூறாய்வு செய்து
பார்த்திடவே!....

-



கண்மூடி ரசித்திட
ஆயிரமாயிரம்
உண்டாகினும்,

அத்தி பூத்தாற்போல்
என்னுள் கசிந்த
அன்பின்பாற் கருவான
இக்காதல்
மீதமான அத்தனைக்கும்
முதற்றே உலகு!.....

-



எழுதும்
போதெல்லாம்
வார்த்தைகள்
இருக்கிறது
உணர்ச்சிகள்
அற்றபடி,
வண்ணங்களில்லாத
வானவில் போல!....

-


Fetching பா.சravana க்குமாா் Quotes