எதிர்பார்ப்பின்
உண்மையான
அர்த்தம் உணர்ந்தேன்
உந்தன் வருகைக்கான
காத்திருப்பில் ...
-
P BHARATH
(BHARATH)
11 Followers · 2 Following
Joined 17 September 2019
12 AUG 2022 AT 1:57
11 NOV 2020 AT 18:34
எதிர்பாராத ஒரு சந்திப்பு
எதிர்பாரத ஒரிரு வார்த்தைகள்
எதிர்பாராத ஓர் முத்தம்
இவையாவும்
தரும் மகிழ்ச்சியை
வேறு எவையும்
தந்துவிடுவதில்லை
-
9 OCT 2020 AT 8:24
துன்பம் மட்டுமே
மிளிருகிறது
நீ இல்லாத
எந்தன் வாழ்வில்
நான் பயணிக்கும்
இடங்களில் எல்லாம்
-
19 SEP 2020 AT 17:21
நிம்மதியுடன் வாழ்கிறேன்
என யாராலும்
எளிதில் சொல்லப்படுவதில்லை
அவ்வளவு எளிதில்
வாழ்க்கை யாருக்கும்
நிம்மதியை தந்துவிடுவதில்லை
-
7 SEP 2020 AT 18:32
ஆயிரம் நூல்களில் இருந்து
பெற முடியாத அறிவை
சில அனுபவங்கள்
தந்துவிட்டு சென்று விடுகிறது
-
4 SEP 2020 AT 17:54
அதிகாரத்தால்
பெற்றது எதுவும்
காலத்திற்கும் நிலைக்காது
அன்பால் பெற்றது
எல்லாம்
நம் காலடியிலே இருக்கும்
-
28 AUG 2020 AT 21:23
செய்த தவறை
நியாயப்படுத்த
முயற்சி செய்வதை விட
அதை ஒத்து கொள்வதே
மனிதனுக்கும்,மனதிற்கும் அழகு
-