செவிகள் சாய்த்து அயராமல் என் புலம்பல் கேட்டுப் புன் முறுவலால் அதை நீர்து போக செய்யும் பண்பையும்.
கடலாக என் விழித் துளிகளை சிறு பார்வையால் துடைத்த அன்பையும் என்றும் மறவேன்.
மனதில் ஒரு இடமுண்டு அதில் தனியே உனக்கு ஒரு அறை உண்டு.
கடலாய் பேசிய மொழிகளும் உன் மௌனங்களிடம் தோர்தே போகும்.
விழி அசைவும் இதழ் வளைவு மட்டும் போதுமே என் படபடக்கும் இதயம் இதமாய் இணைய
ஒவ்வொரு முறையும் புதிதாய் எழுத காரணமும் நியே அள்ளித் தருகிறாய்
நிஜமாக நினைக்கவில்லை, நினைத்தாலும் நம்பவில்லை நாம் இருவரும் இத்தனை ஆண்டுகள் பேசுவோம் என்று.
என்று பேசினாலும் மதிப்பும் மரியாதையும் மறந்து கூட மறாது.
ஆயிரம் ஆசைகளில் ஒரு ஆசை நீ என்றும் அன்புடன் அழகாய் வாழ வேண்டும் என்று.
சிரிப்புகளும் சிந்தனைகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்.
அன்பும் அரவணைப்பும் ஆசை முத்தங்களும் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
--
Denied person,
Google me -"Ojeash Amirthalingam"
Smile when the reality mocks you. read more
இரவினை நீந்திசெல்ல இரு கரமும் போதவில்லை
நீ இரு-விழி சுருக்கி என்னை பார்த்து போன நினைவலைகள் அடித்த போதெல்லாம்
கடல் அலை போல, நீ சிரித்த சிரிப்பலைகளின் ஞாபகங்கள் வந்து வந்து போகுதடி
இந்த பொல்லாத இரவினை நீந்திசெல்ல இரு கரமும் போதவில்லை !-
நினைவலையில் நீந்தும் நினைவுகள் நித்தம், கவிதைகள் கிறுக்கிட; அதை உன் செவிக்குள் புகுத்தி , இதழ் வளைவுகளை வளைந்தோட விடுவேன்.
-
நித்தம் நித்தம் நினைவலையில் நீந்திச் செல்லும் உன் ஸ்பரிசம்❤️
நெஞ்சில் ஏனோ ஒரு புதுவித உணர்வை ஊட்டிச் செல்கிறது.
வியப்பினை விதைத்து மலைக்க செய்யும் உன் விந்தையும்
ஏனோ என்னை, உன்னை சுற்றியே சுழல வைக்கிறது.
கானகமாயினும் கவிசாரல் தூவிட முனைவேன்
என் மூக்கினை துளைத்திடும் உன் மணம் சொல்லும் வழியில்.❤️
விதிவிலக்கல்ல நானும் உன் பிணையில் இருந்து தப்ப.
விருப்பபட்டே உன் விசையில் சொக்கி நடப்பேன், என் நாட்கள் தீர.
காற்றில் கமழும் உன் வாசம் போதும்
என் பேச்சும், போக்கும் சொக்கி போகும்!🥂
உன்னை தொட்டுச் சுவைக்க திட்டமிட்டே
பாவி பல நாட்களை கோட்டைவிட்டேன்.
அறுசுவையும் அசந்து போகும் நீ ஊட்டும் இந்த தனி சுவைக்காக!
மதி மயக்கும் மாயமே! விழி குளிரும் சோலையே!
என்றும் சொக்கி நிற்பேன் உன் சுவை தீண்டவே!
பிரியமுடன் பிரியாமல் பிறப்பின் பலன் குடுத்த பிரியாணியே!
என் அன்பும், ஆசை முத்தங்களும் உனக்கே!!.❤️-
தனிமையும் கொஞ்சம் தானாக தள்ளிப்போக ஏங்கும் , உன் குரல் கேட்கையில்
-
கனவுகள் பல உண்டு, கண்மணி உன்னோடு பல கனாக்கள் காணும் வேளையில் கை கோர்த்து நடக்க வேண்டுமென!❤️ .
நினைவுகள் பல சேர்ப்போம், எது பெரியது என போரிடும் வரை சேர்த்து தீர்போம்!
விழிகளை திசை திருப்ப மறுத்த கனம், நொடிகள் போல் பல மணி நேரங்கள் ஓடின!
இரவுகள் பல இது போல போக வேண்டுமென , உரையாடல்கள் நீண்டன!
கணவென நினைத்தது பல பேசி தீர்க்கும் கிடைத்த ஒரு தோழி நீ!
கண் சிமிட்டும் வேலை இதய துடிப்பும் சேர்த்து சிணுங்க வைக்கும் அழிய அரக்கி நீ!
விழி தீண்டிய கனம் விரல்கள் கோர்த்து நேரம் தீர்ந்த பின்னும் விழி விசைய விரும்பவில்லை!
காற்றின் ஈரம் தீண்டிய பின்னும் உடல் வெப்பம் ஏற்றியது உன் நெருக்கம்!
சொல்லின் செயல்கள் உணர்த்தும் அழகு இதழ் புன்னகை ஒன்றில் இசைத்திடுவாய்!
காலம் கடந்தாலும் அன்பு செலுத்தும் உன் உறவு தொடர்ந்திட விழைகிறேன்!
-
கவிதையும் கரைந்து போகும் நீ கண் அசைத்தால்❤️, கற்பனையும் மொட்டுக்களும் மலர்ந்து ஏங்கும் உன் கூந்தல் ஏற!
-