வேல் உடையான்
பன்னிரு கூர் பார் உடையான்
பார்வையால் கொய்யும் சக்தி உடையான்
பக்திக்கு பணியும் பழனி மலையான்
-
பயணமோ பேருந்தில்
பணயமோ நான் உன்னிடத்தில்
கருவிழியோ என்னிடத்தில்
அதன் உயிர்வழியோ உன்னிடத்தில்
விழிமொழியோ நம்மிடத்தில்
என் தமிழ்மொழியோ நீ, என்னிடத்தில்!!!-
தீப ஒளியில் திருதணி மலையில்
தினந்தினம் ஒருவனைக் கண்டேன்
தீராத துன்பத்தை தீர்த்திடும் திறமுடய
திருவருள் கொண்டவனாய் நின்ற
தேவர்கள் துயர் தீர்த்த தெய்வத்தின் திருவடியில்
தன்னிலை மறந்தவளாய் நின்றேன்!-
யாதும் நீயடி என்னில் -எனினும்
கோபம் ஏனடி கண்ணில்
என்னை தேடினேன் உன்னில்
என் உயிர் இருப்பதோ உன் கண்ணில்!!-
மரணித்து விட்டேன் அன்பே
உன் கண்களின் கூர்மையால்
மீண்டும் ஜனித்து வந்தேன் இன்றே
உன் இதழ்களின் மென்மையால்
மாண்டு மீண்டு வந்த என்னை
மீண்டும் வீழச் செய்யும் உன்னை
மன்னித்தேன் காதலே !!!-
என் மன்னன் மனதில்
என் மனம் மாட்ட - அவனே
என் கண்ணன் ஆகி
என் கண்களிடம் பேச
அவன் குழல் ஓசையால்
என் குரல் குழைய
என் அவன் ஆசையால்
என் மனம் அழைய
அவன் கரம் பிடிக்கவே
என் கரம் ஏங்கி
எழுதியதே கவிதை!!!-
மலரே என் மலரே!!!
வெண்மலர் மனம் கொண்ட என் மலரே
௭ன் மனம் வென்ற ௭ன் மலரே
உன் பின் தினமும் சுற்ற வைத்த என் மலரே
உனக்கென கையில் ஏந்த வைத்தாய் மலரே
என் அவள் ஆன என் மலரே
உன் பின் இன்றும் வருகிறேன் மலரே
உனக்கென இன்றும் ஏந்தினேன் மலரே
உன் இறுதி ஊர்வலத்தில்!!!-
காதல் என்னும் கடலில் பிறந்தவளே
அலையாய் வந்து என் மனதை மட்டும்
அழைத்து சென்றவளே!!!
நீ சென்ற இடம் தெரியாமல்
அலையாய் அலைந்து தேடுபவனாய்
நான்!!!
-
என் அவள் என்னை பார்கையில்
அவளது அவனாய் இருக்க விரும்பி
எனது என்னை துலைத்த நான்!!!
-