Nitro Navaneeth   (Nitro Navaneethan)
57 Followers · 52 Following

read more
Joined 8 October 2018


read more
Joined 8 October 2018
14 MAY AT 21:26

பெருங்கடலின் நடுவே,
காகிதத்தில் கப்பல் ஒன்று!
துடுப்புகளின்றி
தவழ்ந்து செல்கிறது,
எல்லையின் தடுப்புகளை தகர்த்து; தப்பித்துச் சென்றதாக
கூறப்படும், மீனவனுடைய
விசைப்படகின்,
பிரசவத்திலிருந்து...!

-


14 MAY AT 21:09

சற்றே நெஞ்சு வலி !
கால் சட்டைக்கு சென்றது
மாத இறுதியில்,
சட்டென்று கை !!!

-


14 MAY AT 18:50

திருட சென்றவனுக்கு
நகை தந்தது வீட்டின்
முன்கதவு விளம்பர
பலகை ஒன்று,
"வீடு வாடகைக்கு
விடப்படும்!"

-


13 MAY AT 21:12

பக்கம் வரும் முன்னே,
சற்று வெக்கப்படும் பெண்ணே !
கால தாமதமின்றி
உந்தன் காதலைச் சொல்,
காதருகினில் கடிகாரம்
குலைக்கும் முன்பாக..,

-


29 APR AT 21:47

ஒரு நிலவு..,
இரு நினைவு..,
முதல் ஒன்று தொலைதூரம்...
மற்றொன்று,
தொலைந்(த்)த துயரம்...

-


29 APR AT 21:45

ஒரு நிலவு..,
இரு நினைவு..,
முதல் ஒன்று தொலைதூரம்...
மற்றொன்று,
தொலைந்(த்)த துயரம்...

-


25 APR AT 20:15

இருள் சூழ்ந்த உலகினில்
வழி மாறிய மின்மினி
பூச்சிக்கு ஒளி தந்தது
அதன் பின்னனியே !
ஒளி தரும் வலியை மறந்து
முன் தோன்றிய வழியினை
தொடர்ந்து இருளை தகர்த்து
முன்னேறி செல்கிறது
ஓர் தேன் கூட்டின் உள்ளே...!!!

-


22 APR AT 23:09

வண்ண வண்ண
எழுதுகோல்
விள(க்)கி சொல்கிறது,
ஏதார்த்தமாக
எந்தன் கருப்பு - வெள்ளை
வாழ்வினை...!!!

-


18 FEB AT 18:37

விழி வருகைக்கு,
துளி தருகை
கட்டுப்பாடற்ற
தனிமை...!

-


17 FEB AT 22:01

உன் இமை முடி
தரை விழும் நொடி
என் மனதுக்குள் கோடி
இடைவெளியற்ற பனிமழைஇடி, அதிலும்
நனையாது கண்டேன், உன்னிடத்தில் தந்திட நினைத்த பூச்செடி சற்று ஓய்வு பெறுகிறது முதலில் நீ கசக்கிய கண்மலரினை கண்டு..!

-


Fetching Nitro Navaneeth Quotes