Nithya BalaChandhar   (நித்யா பாலசந்தர்)
4 Followers · 5 Following

read more
Joined 30 March 2024


read more
Joined 30 March 2024
11 HOURS AGO

என்னில் நீ பார்க்கும்
குணங்கள் அனைத்தும்...
உன்னில் என்னைப் பற்றி
நீ வரையறை செய்த
எண்ணங்களின் பிரதிபலிப்பு...!

-


YESTERDAY AT 19:57

மனதில் நினைத்ததை
வெளியில் சொல்ல இயலாமல்...
கசப்பான புன்னகையை
வலிய வரவழைத்து...
சில கனமான நொடிகளை
நாம் போகிற போக்கில்
கடக்க வேண்டி உள்ளது...!

-


YESTERDAY AT 0:36

உன்னுள் இருக்கும் உலகம் அழகானால்...
உன்னைச் சுற்றி இருக்கும்
உலகமும் அழகாய் மாறும்...!

-


4 MAY AT 16:48

காதலால் நீளட்டும்...
பிரிந்திருக்கும்
நம் இருவருள்ளும் வளரும்
தீராக் காதல்...
கனவுகளின் வழி...
உயிர் தீண்டிச் செல்லட்டும்...!

-


4 MAY AT 16:40

எனக்குள் வாதிட்டு
தோற்ற பொழுதுகளில்
கிடைத்த தன்னம்பிக்கை தான்
இன்று எனக்காய் நான் பேசும் தருணங்கள்...!

-


1 MAY AT 23:37

'உன்னால முடியாது' என்று பிறர்
என்னை பரிகசித்தப் பொழுதுகளை...
வலியச் சென்று வென்று
காட்டும் தருணங்களில்...
அந்த வான் வீதியில்...
மேகக் கூட்டங்களுக்கு நடுவே...
உயரப் பறக்கும் ராஜாளியாய்
பிடரி சிலிர்க்க...
சிறகடித்து பறக்கிறேன்...!

-


30 APR AT 19:49

அவ்வண்ணங்களின் வழி...
என் எண்ணங்கள் கூட
அழகாயிற்று..!

-


29 APR AT 7:29

வடுக்கள் நிறைந்த ஆழ்மனதில்...
வலி மிகுந்த கடந்தகால நினைவுகள்
ஆயிரம் இருக்கும்...!

-


28 APR AT 16:23

தனித்து வாழ
விழைகிறது மனம்...
போலி முகமூடி இட்டு
மற்றவர்களுக்காய்
வாழ்ந்து வாழ்ந்து...
சலித்துவிட்ட..
ஓர் இதயத்தின்
கூக்குரல் இது...!

-


28 APR AT 13:18

அன்று நீ கொடுத்த மயிலிறகு...
இன்றும் என் புத்தகங்களுக்கு
நடுவே...
உன் நினைவுகளாய்...

-


Fetching Nithya BalaChandhar Quotes