நிலை இல்லாத உலகத்திலே என் நிலை இதுதான் என்று உணரவைத்தாய்!
என் உதிரம் சுண்டும் வரை உன்னை நினைக்க வைத்தாய்!!
போகும் பாதை இதுதான் என்று புரிய வைத்தாய்...
பொய்யானதொரு உலகத்திலே மெய் கொண்டு என்னை நடமாட வைத்தாய்..
நான் உனைத் தேடி தீர்க்கும் வரை மறைவாய் நின்று என்னை காக்க வைத்தாய்..
என்னுள்ளே என்னை ஓயாமல் தேடி தீர்த்து உன்னைக் கண்டு கொண்டேன்!
என் உயிர் நீ அல்லவா...
இறைவா...
- நித்தி - களவு போன கனவுகள
4 FEB 2019 AT 22:04